சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க முடியுமா? டி.இ.டி. தேர்வர்கள் கவலை!Dinamalar News (update-kalviseithi) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 19, 2014

சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க முடியுமா? டி.இ.டி. தேர்வர்கள் கவலை!Dinamalar News (update-kalviseithi)


சான்றிதழ்களில் கல்வி அலுவலர்களின் கையெழுத்து பெற போதிய கால அவகாசம் இல்லாத நிலையில் 20ம் தேதி துவங்கும் சான்றிதழ் சரிபார்ப்பு முகாமில் பங்கேற்க முடியுமா என ஆசிரியர் தகுதி தேர்வர் (டி.இ.டி.,)
கவலை அடைந்துள்ளனர்.

அழைப்பு கடிதம்

டி.இ.டி., முதல் தாள் (இடைநிலை ஆசிரியர்) மற்றும் இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 20ம் தேதி முதல் 27 வரை 32 மாவட்டங்களிலும் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இதற்கான அழைப்பு கடிதம் ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) இணைய தளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டு உள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த தகவல் 11ம் தேதி வெளியானது. "தேர்வர் சான்றிதழ்களின் இரு "செட்" நகல்களில் சம்பந்தப்பட்ட கல்வி அலுவலரிடம் கையெழுத்து பெற்று வர வேண்டும். தமிழ் வழியில் படித்தவராக இருந்தால், அதற்குரிய சான்றிதழை பெற்று வர வேண்டும்" என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

( தமிழ் வழியில் படித்ததற்கான ) கல்வி சான்றிதழ் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அலுவலரிடம் கையெழுத்து பெற வேண்டும். பள்ளி சான்றிதழில் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடமும், பட்ட சான்றிதழில் கல்லூரி முதல்வரிடமும், பல்கலையில் படித்தால் துறை தலைவரோ அல்லது பதிவாளரிடமோ கையெழுத்து பெற வேண்டும். அறிவிப்பு வெளியான பின் 13, 17 ஆகிய இரு நாட்கள் மட்டுமே வேலை நாட்கள். மற்ற நாட்கள் பொங்கல் விடுமுறை. இதனால், சான்றிதழ்களில் கையெழுத்து பெற முடியாமல் தேர்வர்கள் அலைந்து கொண்டு இருக்கின்றனர்.

குறிப்பாக, பல்வேறு பல்கலைகளில் தொலைதூர கல்வி திட்டத்தில் பட்டம் படித்தவர்கள் சம்பந்தப்பட்ட பல்கலைக்கு நேரில் சென்று உரிய அலுவலரிடம் கையெழுத்து பெற வேண்டும். இதற்கு போதிய கால அவகாசம் இல்லை. "தமிழ் வழியில் படித்தவர்கள் அதற்கான சான்றிதழை இணைக்க வேண்டும்" என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. எந்த அலுவலரிடம் சான்றிதழ் பெற வேண்டும் என, தெரிவிக்கவில்லை.

தமிழ் வழி

மேலும் பி.ஏ., தமிழ், எம்.ஏ., தமிழ் படித்தவர்களும் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை ஏன் இணைக்க வேண்டும் என, தேர்வர்கள் கேள்வி எழுப்புகின்றனர். படித்ததே தமிழ் எனும்போது இந்த பாடம் சம்பந்தப்பட்டவர்களிடம் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் கேட்பது சரியல்ல என, தெரிவிக்கின்றனர்.

குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க வேண்டும் எனவும் உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்க தவறினால் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது என்றும் டி.ஆர்.பி., அறிவித்திருப்பதால் தேர்வர்கள் கவலை அடைந்துள்ளனர்.

ஏன் இந்த கமுக்கம்?

டி.இ.டி., தேர்வு முடிவு தொடர்பான விவரங்களை முழுமையாக வெளியிட டி.ஆர்.பி. தயக்கம் காட்டுகிறது. பட்டதாரி ஆசிரியர் தேர்வு மறு மதிப்பீட்டால் எத்தனை தேர்வர்களுக்கு மதிப்பெண் அதிகரித்தது, முதுகலை ஆசிரியர் திருத்திய தேர்வு முடிவு வெளியீட்டால் எத்தனை தேர்வர் தேர்ச்சி பெற்றனர் என்பது உள்ளிட்ட எந்த விவரங்களையும் டி.ஆர்.பி., வெளிப்படையாக வெளியிடவில்லை.

மேலும், தேர்ச்சி பெற்றவர் விவரங்களை பாட வாரியாக அனைவரும் பார்க்கும் வகையில் முடிவை வெளியிடாமல், தேர்வர் ஒவ்வொருவரும் தனித் தனியாக முடிவை அறியும் வகையில் வெளியிடப்பட்டன. இதனால் டி.ஆர்.பி.,யில் வெளிப்படைத்தன்மை இல்லை என, தேர்வர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

59 comments:

  1. Can we get attestation from any G.officer..

    ReplyDelete
  2. TRB AND GOVT cheat people....

    ReplyDelete
  3. Attested. gazetted officer. Edu dpt aaha irrukkanuma????? Please tell ....

    ReplyDelete
    Replies
    1. No.... Any gazetted officer. ( Con.Certificate and Gazetted officer sign ithukku CV-la mukkiyathuvam tharuvathillai. PG TRB CV attend panna anupavam)

      Delete
  4. Attested. gazetted officer. Edu dpt aaha irrukkanuma????? Please tell ....

    ReplyDelete
  5. will i get attested from goverment aided HSS Head master?please reply.

    ReplyDelete
  6. i got attesation by g.officer is it ok but he dont put date is it any problum????

    ReplyDelete
    Replies
    1. 100% No Problem sir...... But ungalukku payama iruntha oru green pen vaangi date-a neengale podunga boss.....

      Delete
  7. I got from Lawer. Is it enough. ?pl clarify anyone. Daily one rumour. V can't tolerate .god only can help us

    ReplyDelete
    Replies
    1. God can only kick you for ur ignorance. Attestation can be gotten from any gazetted officers. TRB did not give any stubborn instruction to the candidates saying attestation must be from education department person.. You all urself having wrong assumptions and confusing other candidates as well. Attestation and all does not matter when it comes to CV.. Board members from TRB will double check only ur percentage, educational qualification and originality of the certificates during ur CV..

      Delete
  8. Any green ink govt officer attested accepted . Dont feel all are accepted. And extra two set take. Any clarification suddenly attested the spot officers.

    ReplyDelete
  9. Any green ink govt officer attested accepted . Dont feel all are accepted. And extra two set take. Any clarification suddenly attested the spot officers.

    ReplyDelete
  10. Dear admin sir this is dinamalar fake news . Enga bio data form la ye attested gazatted officer nu potturuku. Antha school and college la vanganumnu podala. Tamil medium certificate than antha institute la vanganumnu potturuku . Nega conform pannathuku aparama update pannunga. This is 27000 oda life sir

    ReplyDelete
    Replies
    1. You are right.. It is a fake news from some stupid newspaper.. Media should educate people rather than panicking them.. I request the admin not to publish this kind of fake news as it creates panic among candidates unnecessarily..

      Delete
  11. hi frnds,jus i called dinamalar bt no proper response from them...all candidates call them....

    ReplyDelete
  12. dear admin, is it true news or not? plz confirm it....

    ReplyDelete
  13. Sir i have the b. Sc. Consolidated mark sheet only. I dont have seperate semester mark sheets. Is it compulsory?

    ReplyDelete
  14. the hindu(tamil) also has puplished this news bt not like in dinamalar....

    ReplyDelete
  15. dinamalar contact no.0044 28540001

    ReplyDelete
  16. I didnt get tamil medium certificate...is it compulsory? for me tomorrow cv

    ReplyDelete
  17. hai friends,
    i am maths with computer application candidate, this time trb give the seperate code for maths if it is neccessary to get the equivelence certificate from university, i have cv on 23 jan, please any one reply me, i have less amount of time, please help me friends!!!!!!

    ReplyDelete
    Replies
    1. hi frnd i'm also. Yentha university

      Delete
    2. neenga yentha university frnd

      Delete
    3. PG TRB CV-in pothu anaiththu CEO-kkum Entha Degree ethukku Equivalent-nu oru Book-ke sutrarikkaiyaga anuppinargal. So Neenga 1st Unga Dt CEO-vai meet pannunga. illana sammanthappatta University-ku senru ungalin piratchanai Udanadiya theeerungal. melum kadantha 6 month-la TN-la veliyidappata Equivalent patriya RTI arikkaigalai download seiyunga.

      Delete
    4. thank you friend, i am bharathiar university

      Delete
    5. frnd G O no 72 ah download pannunga. 2013 july la nadantha cv la all university bsc maths with ca and ba english witha ca candidate select pannirukkanga so don't worry.

      Delete
  18. sir yaarkitta sighn vaankanumnu thelivaa sollunga
    kulappatheenka pls

    ReplyDelete
    Replies
    1. I am raja pg selected candidate.you should get attested on identification certificate and bio data,all other mark sheet. From middle school hm,high and high sec school hm...and BT. And PG Assistant government school teachers also ceo,,DEO,AEO....AE from EP staff...GOVT DOCTORS...ALL are gested officers...you go to you studied school. Get the sign form HM OR PG OR BT ASSISTENT STAFF or. Gov'tcollege .... HOD,PROFESOR ,PRINCIPAL.OTHER SCHOOL STAFF NEVER SIGN YOU. Date no need..sign get only green ink pen .if you get blue ink no problem at that time they verify only tour certificate...so donot feer..if you select for Tamil medium. Must get Tamil medium certificate...

      Delete
    2. raja pl help me .am study in aided school. I bought sign from aided school hm. somebody comment aided school hm kita vanga kudadhu ?pl clear me and c.v formsku nan doctorkita sign vankirukan..now what am want do?

      Delete
    3. Thappe illa, neeng payapadathing . neenga sariyanathathaan sethullirgal. Ungalai payamuruthuravanga Vaayila manna vaari podunga Boos.

      Delete
    4. ezhil sir r u joke me? r support me?

      Delete
    5. thanks ezhil confusa erudhuchu now nimithiya eruku sir

      Delete
  19. date odadha sign vanuma sir? pl reply

    ReplyDelete
  20. shall i get sign from govt. doc. any friend reply me

    ReplyDelete
  21. Attested officers:Govt high,hr.sec.school HM's,AEEO,BDO,govt doctor,Police inspecter,Thasildar,PWD,TNEB-JE, Dont attested in Aided school HM's.

    ReplyDelete
  22. date kandipa vanuma sir

    ReplyDelete
  23. Ug % parka language add pannanuma illa major + allied mattuma? Pls reply

    ReplyDelete
    Replies
    1. Over all percentage pg ku paarthaanga pa.so two are prepared two type of percentage one is overall others is major+allied.

      Delete
  24. B.ed option2 english na b.ed tamil medium illaya?

    ReplyDelete
  25. b.ed ku theory mattum % podanuma illa practical serthu podanuma any one reply plz.

    ReplyDelete
    Replies
    1. Theory+ Practical irandaium serththu % kandupidikkanum. CV-la ungalukku oru form tharuvanga athula ungaloda anaththu mark-kaium subject vaariya ezhuthi % poda solluvanga. athula % correct-a podunga.

      Delete
  26. raja pl help me .am study in aided school. I bought sign from aided school hm. somebody comment aided school hm kita vanga kudadhu ?pl clear me and c.v formsku nan doctorkita sign vankirukan..now what am want do?

    ReplyDelete
    Replies
    1. Hello friend. I am raja just now I ask. One CEO (CHIEF EDUCATIONAL OFFICER).he told me no problem..at the time of verification they verify ur marks and certificate only .not verified where you get sign and whom sign you...and date.ok vaanga...so donot fear...manasu kitgalana...cv ku innum date iruntha you tet another sign from gov't staff ok vaanga...sorry for late comments..I have lot of work.just now I am see your comment..

      Delete
    2. Thanks raja sir now am relaxed thanks

      Delete
  27. ஆசிரியர் தகுதிதேர்வு இட ஒதுக்கீட்டை அழிக்கும் தமிழக அரசு ?

    தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் 15000
    ஆனால்
    அறிவித்த காலிப்பணியிடம் 13000

    தேர்ச்சி பெற்ற ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் 12000
    ஆனால்
    அறிவித்த காலிப்பணியிடம் 2000

    பின்னர் சான்றிதழ் சரிபார்பிற்க்கு27000 பேரையும் அலைய வைக்க வேண்டிய அவசியம் என்ன ?
    * முதலில் TRB சார்பில் அரசு விளம்பரம் வெளியிட வேண்டும். இட ஒதுக்கீட்டின் அடிப்படையில்,
    .
    * அதன் பிறகு TET இல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
    .
    * விண்ணப்பித்தவர்களிடம் இருந்து தகுதியான நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்பிற்க்கான அழைப்பிதழ் கடிதம் அனுப்பிவைக்கப்படும்.
    .
    * சான்றிதழ் சரிபார்த்து முடிந்தபிறகு இறுதி பட்டியலுக்காக காத்திருக்க வேண்டும்.
    .
    * இறுதி பட்டியல் வந்த உடன் தங்களுக்கு உரிய பள்ளியை தேர்வு செய்ய கலந்தாய்வுக்கு சென்று பனி ஆணை வாகிய பிறகு தான் பணியில் சேர முடியும்.
    .
    * முறையான இட ஒதுக்கீட்டு முறை கடைப்பிடிக்கப்பட்டால் மேலே சொன்ன வழி முறைகளின் படி நடந்தால் மட்டுமே சாத்தியம்.
    .
    ஆனால்
    .
    தேர்தலை மனதில் கொண்டு தமிழக அரசு அவசர அவசரமாக தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் 15000 பேரையும், ஆசிரியர் பயிற்சி முடித்து தேர்ச்சி பெற்ற 12000 பேரையும் சான்றிதழ் சரிபார்பிற்க்காக அழைத்துள்ளது.
    .
    இது இட ஒதுக்கீட்டிற்குஎதிராக அமைந்துள்ளது.
    --------------------------------------------------------------
    முறையான இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கபடாவிட்டால் முதல் கட்டமாக போராட்டம் நடத்தப்படும், அடுத்தகட்டமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பணி நியமனத்திற்கு தடை கேட்டு வழக்கு தொடரப்படும் என்று அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
    .
    .
    அரசு சொன்ன எண்ணிக்கையின் அடிப்படையில் கீழ் கண்டவாறு பணி நியமனம் இருக்க வேண்டும் இருக்குமா ?
    .
    சமூக நீதியை வேரறுத்து இட இதுகீட்டையே காலி செய்ய நினைக்கின்றது தமிழக அரசு என்ற எண்ணம் மக்களிடம் வேருன்ற தொடங்கிவிட்டது?.
    .
    இதன் பலனை வரும் தேர்தலிலே சந்திக்க வேண்டி இருக்குமா?

    ReplyDelete
    Replies
    1. Nee fail aana casa?

      Delete
    2. How do you know TRB and TN govt not following reservation quota in filling up the teacher posts? Before seeing the final list, commenting like this is inappropriate.. Do not spread rumours of this kind..

      Delete
  28. papper 1 cutoff 76 sc male can i get job?






















































































    ReplyDelete
  29. papper 1 cutoff 76 sc male can i get job?






















































































    ReplyDelete
  30. All the best frnds for ur tet cv. .

    ReplyDelete

  31. ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்த ஆகஸ்ட் 17, 18-ம் தேதிகளில் நடத்தப்பட்டது. இடைநிலை ஆசிரியர்களுக்கா ன தகுதித்தேர்வை (முதல் தாள்) 2,60,000 பேரும், பட்டதாரி ஆசிரியர்களுக்கா ன தகுதித்தேர்வினை (2-ம் தாள்) 4 லட்சம் பேரும் எழுதினர். இதில், முதல் தாளில் 12,596 ஆசிரியர்களும் 2-ம் தாளில் ஏறத்தாழ 17 ஆயிரம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    பட்டதாரி ஆசிரியர்களை நியமனத்தில் பின்பற்றப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையையே இந்த தடவை இடைநிலை ஆசிரியர் நியமனத்திலும் கடைப்பிடிக்க அரசு முடிவுசெய்துள்ள து. அதன்படி, தகுதித்தேர்வு மதிப்பெண்ணுடன் பிளஸ்-2 மதிப்பெண், பட்டப் படிப்பு, பி.எட். மதிப்பெண், இடைநிலை ஆசிரியராக இருந்தால் ஆசிரியர் பட்டயப் படிப்பு தேர்வு மதிப்பெண் ஆகியவை கணக்கில் கொள்ளப்படும்.
    இதற்கிடையே, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டப டி, தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்க ளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நாளை (திங்கள்கிழமை) தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. மாவட்டத்துக்கு ஒரு மையம் என்ற அடிப்படையில் 32 மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது .
    சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும்போது ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அழைப்புக்கடிதம் , சுயவிவர படிவம், அடையாளச்சான்று, கல்வி, சாதி சான்றிதழ்கள், சான்றொப்பம் பெறப்பட்ட அவற்றின் நகல்கள், 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றை தவறாமல் கொண்டுவர வேண்டும் என்று ஆசிரியர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர். சென்னையில் அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி யில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
    சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை ஆய்வுசெய்வதற்கா க இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள் ளன. இந்த குழுவில், தமிழ்நாடு பாடநூல் கழக செயலாளர் எஸ்.அன்பழகன், மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் எஸ்.கண்ணப்பன், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட (ஆர்.எம்.எஸ்.ஏ. ) இயக்குனர் ஏ.சங்கர், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனர் ஆர்.பிச்சை ஆகியோரும், இணை இயக்குனர்கள் ஏ.கருப்பசாமி (பணியாளர்), எஸ்.கார்மேகம் (மெட்ரிக்), வி.பாலமுருகன் (மேல்நிலைக்கல்வ ி), எஸ்.உமா (ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில்), டி.உமா (ஆசிரியர் தேர்வு வாரியம்) உள்பட 20-க்கும் மேற்பட்ட இணை இயக்குனர்களும் இடம்பெற்றுள்ளனர ்.
    பெரிய மாவட்டங்களுக்கு ஒரு அதிகாரியும், சிறிய மாவட்டங்களாக இருந்தால் இரண்டு மூன்று மாவட்டங்களுக்கு ச் சேர்ந்து ஒரு அதிகாரியும் பணிகளை ஆய்வுசெய்வார்கள ். சான்றிதழ் சரிபார்ப்பின்போ து, சான்றிதழ்கள் சரிபார்க்கப்படு வதுடன் பிளஸ்-2, பட்டப் படி, பி.எட்., இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்களும் பதிவுசெய்யப்படு ம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி