நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பேரிடர் மேலாண்மை பயிற்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 20, 2014

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பேரிடர் மேலாண்மை பயிற்சி.


நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் நாளை தீ தடுப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை செயல்முறை விளக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.தேசிய அளவில் அரசு,
அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் கடந்த காலங்களில் பேரிடர் ஏற்பட்டு மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பலியாகி உள்ளனர்.இதை தவிர்க்க பேரிடர் சம்பவம் நடக்கும் போது தங்களையும், இடர்பாடுகளில் சிக்கியவர்களை மீட்பது குறித்து பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த கடந்த சில ஆண்டுகளாக பேரிடர் மேலாண்மை செயல்முறை விளக்க பயிற்சி நாடு முழுவதும் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினரால் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தாண்டும் தேசிய அளவில் தீ தடுப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை செயல்முறை பயிற்சியை பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்களுக்கு அளிக்க வேண்டும் என்று மத்தியஉள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகள் மூலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறைக்கு உத்தரவிட்டு இருந்தது.பள்ளி விடுமுறை நாட்களில் செயல்முறை பயிற்சியை அளிக்க வேண்டும். குறிப்பாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இப்பயிற்சி அளிக்கப்பட வேண்டும். லோக்கல் போலீஸார், மருத்துவ துறையினர், அரசு அதிகாரிகள், தீயணைப்பு துறையை சேர்ந்த ஆறு முதல் 10 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் குழுவாக பங்கேற்று செயல்முறை விளக்கபயிற்சி அளிக்க வேண்டும்.அப்பகுதி தீயணைப்பு நிலையங்கள் சார்பிலும் ஏதாவது ஒரு பள்ளியில் செயல்முறை விளக்க பயிற்சி அளிக்கலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் நடத்தப்படும் செயல் முறை விளக்க விழிப்புணர்வு நிகழ்ச்சியை சென்னையில் உள்ள இயக்குனரகம் உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நாளை (21ம் தேதி) காலை 11 மணிக்கு பேரிடர் மேலாண்மை செயல்முறை விளக்க பயிற்சி அளிக்க மாவட்ட தீயணைப்பு அலுவலர்களுக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டது. நாளை ஈரோடு இண்டியன் பப்ளிக் பள்ளியில் செயல்முறை விளக்க பயிற்சி நடக்கிறது.இதே போல் பள்ளிகளில் "பள்ளி தீ மேலாண்மை குழு" அமைக்க வேண்டும்.

இதில் சேர்மன், முதல்வர், துணை முதல்வர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் இடம் பெற வேண்டும். ஒரு குழுவுக்கு இரண்டு ஆசிரியர்கள் வீதம் ஒரு பள்ளியில் குறைந்தது 10 குழுக்கள் அமைக்க வேண்டும். இவர்களுக்கு பேரிடர் மேலாண்மை செயல்முறை விளக்க பயிற்சியை தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் அளிக்க வேண்டும் என அறுவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி