TRB PG LIST 2:உயிரியல், வரலாறு, வணிகவியல், இயற்பியல், வேதியியல், பாடங்களுக்கான திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 11, 2014

TRB PG LIST 2:உயிரியல், வரலாறு, வணிகவியல், இயற்பியல், வேதியியல், பாடங்களுக்கான திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன


தமிழகம் முழுவதும் 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்காக கடந்த ஜூலை 21-ஆம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை மொத்தம் 1.60 லட்சம் பேர் எழுதினர். இந்தத் தேர்வு
முடிந்த பிறகு, பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டதால்பணி நியமனம் பல மாதங்களாக தாமதமாகி வருகிறது.

. தமிழ் பாடத்திற்கு மட்டும், வினாத்தாளில் எழுத்துப் பிழைகள் இருந்ததையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி, அந்தப் பாடத்துக்கான விடைத்தாள்கள் தனியாகமதிப்பீடு செய்யப்பட்டு இறுதி தேர்வுப் பட்டியல் (செலக்சன் லிஸ்ட்)வெளியிடப்பட்டு உள்ளது. இதர பாடங்கள், வழக்கு விவகாரத்தில் சிக்கியிருந்தன.

இந்நிலையில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வின் உயிரியல், வரலாறு, வணிகவியல், இயற்பியல், வேதியியல், பாடங்களுக்கான திருத்தப்பட்டதேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் நேற்று இரவு (ஜன.10) இரவு வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து, கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி வெளியிடப்பட்ட முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஏற்கெனவே வெளியிடப்பட்ட பட்டியலில் இடம்பெற்றிருந்த பல தேர்வர்கள்இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை எனத் தெரிகிறது.

போட்டித் தேர்வுக்கான சில முக்கிய விடைகளை மாற்றி உயர் நீதிமன்றமதுரைக் கிளை நவம்பர் 28-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவின்அடிப்படையில், விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு முடிவுகள்வெளியிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஜன.17-இல் சான்றிதழ் சரிபார்ப்பு: திருத்தப்பட்ட தேர்வுப் பட்டியலில் புதிதாக இடம்பெற்றுள்ளவர்களுக்காக ஜனவரி 17-ஆம் தேதி விழுப்புரம் அரசு மகளிர்
மேல்நிலைப் பள்ளியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க நீதிமன்றத்தின் மூலம் அனுமதி பெற்ற தேர்வர்கள், தங்களது வழக்குகளில் பெற்ற அசல் உத்தரவோடு இதில் பங்கேற்கலாம். ஏற்கெனவே நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க இயலாதவர்கள், இப்போது இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தால் அவர்களும்பங்கேற்கலாம். ஏற்கெனவே நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பிலும் பங்கேற்று, திருத்தப் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளவர்கள் இதில் பங்கேற்க வேண்டியதில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.வெளியிடப்பட்டு இருப்பது, தற்காலிக தேர்வு பட்டியல் தான்.இது, வழக்கின் இறுதி முடிவிற்கு உட்பட்டது.

இவ்வாறு, டி.ஆர்.பி., அறிவித்து உள்ளது

8 comments:

  1. TRB Should publish the Revised Key Answer to justify the changes in marks

    ReplyDelete
  2. Pls anybody. I lost my registration no. Only application no only. How can I chek this revise list... Help me. 9095084874

    ReplyDelete
  3. I lost cv due to 5 marks.but revised list avail. But I lost reg no. Help me anybody.. admin also... Kalvi seithi yai mattume nambeerken.

    ReplyDelete
    Replies
    1. Check ur name and Reg No in the provisional CV list of ur subject given in TRB website. If u r selected for CV, your Reg No is available over there.

      Delete
  4. Dear Commerce candidate see the deleted questions book serial 'C" Q.No;84. Dividend unpaid by the Company within 42 days of its declaration is? we have court order for the remaining two questions , but for this deletion of this question where is Court order copy, we could not find the same with relevant to the TRB mentioned Writ Petition nos. So those who are missed CV by 1 mark should be careful in this issue. Ask everybody TRB

    ReplyDelete
    Replies
    1. we have court order for the remaining two questions ,means please you had court order tell me clearly my mark 103( commerce)

      Delete
  5. Writ petitions mentioned etc. ...
    That's why we couldn't find

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி