10 ஆயிரத்து 99 பேருக்கு, முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று(திங்கட்கிழமை) பணி நியமன ஆணை வழங்குகிறார். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 10, 2014

10 ஆயிரத்து 99 பேருக்கு, முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று(திங்கட்கிழமை) பணி நியமன ஆணை வழங்குகிறார்.


தமிழ்நாடு சிறப்பு காவல் படை 10 ஆயிரத்து 99 பேருக்கு, முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று(திங்கட்கிழமை) பணி நியமன ஆணை வழங்குகிறார்தமிழக போலீஸ் துறைக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா பல்வேறு சலுகைகளையும்,
திட்டங்களையும் அறிவித்து வருகிறார். அதன் ஒரு கட்டமாக தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையினர் 10 ஆயிரத்து 99 பேருக்கு பணி நியமனஆணையை இன்று வழங்க உள்ளார்.தமிழ்நாடு சிறப்பு காவல் படையினருக்கு ஆள்சேர்ப்பு பணி அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், பல்வேறு பயிற்சிகளில் வெற்றி பெற்றவர்கள் தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்து 99 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு பணி நியமன ஆணை இன்று வழங்கப்படுகிறது.சென்னை தலைமை செயலகத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு, நடைபெறும் விழாவில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா, தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 10 ஆயிரத்து 99 பேர்களில், 25 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கி சிறப்பிக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அரசு தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், முதன்மை செயலாளர் ஆபூர்வா வர்மா, தமிழக டி.ஜி.பி.ராமனுஜம் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வருகிற 12–ந்தேதி முதல் பயிற்சிகள் தொடங்குகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி