பள்ளி கல்வித்துறைக்கு ரூ.106 கோடியில் வளர்ச்சி பணிகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 21, 2014

பள்ளி கல்வித்துறைக்கு ரூ.106 கோடியில் வளர்ச்சி பணிகள்.


பள்ளி கல்விதுறைக்கு ரூ.106 கோடியில் வளர்ச்சி பணிகளை முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.ஈரோடு மாவட்டம், மாத்தூரில் ரூ.2 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில்
கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடங்களை முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று முன்தினம் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.

மேலும், 20 மாவட்டங்களில் உள்ள 109 அரசு பள்ளிகளில் ரூ.97 கோடியே 64 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள், கோவை மாவட்ட நூலகத்தில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் சிறப்பு வசதிகளுடன் கூடிய தனிப் பிரிவு, குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவு ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார்.மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டக் கல்வி அலுவலகம், திருவள்ளூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகம் ஆகிய அலுவலகங்களை ஒருங்கிணைத்து ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்வி வளாகம் என ரூ.102 கோடியே 69 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வளர்ச்சி பணிகளை முதல்வர் திறந்து வைத்தார்.ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் 32 மாவட்டங்களிலுள்ள மாவட்ட நூலக அலுவலர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கும் அடையாளமாக ஒருவருக்கு மடிக்கணினி, சதுரங்க போட்டியில் வெற்றி பொற்ற 24 மாணவ, மாணவியருக்கு ரூ.19 ஆயிரத்து 200 பரிசுத் தொகை வழங்கும் விதமாக ஒரு மாணவிக்கு பரிசுத் தொகை, 2013-2014ம் கல்வியாண்டில் 360 மாணவ மாணவியர்களுக்கு ரூ.1 கோடியே 80 லட்சம் உதவித் தொகை வழங்கும் விதமாக ஒரு மாணவருக்கு ரூ.50 ஆயிரம் உதவித் தொகை பத்திரம், 593 பேர்களுக்கு முதுகலை தமிழ் ஆசிரியர் பணி நியமன ஆணை வழங்கும் விதமாக 2 பேருக்கு பணி நியமன ஆணை ஆகியவற்றை முதல்வர் வழங்கினார்.மேலும், தமிழ்நாடுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 23 பேர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விதமாக ஒருவருக்கு பணி நியமன ஆணை, பள்ளிக்கல்வித் துறை பணியாளர்களின்வாரிசுதாரர்களில் 504 பேர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடத்திற் கான பணி நியமன ஆணைகளை வழங்கும் விதமாக ஒருவருக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.

மாநில அரசால் இணைய தளம் வாயிலாக தொடங்கப்பட்டுள்ள Òபள்ளிகளிலுள்ள வகுப்புகளை இணைத்து ஒருங்கிணைந்து பயிலும் திட்டம்Ó என்ற புதிய திட்டத்தைத் துவக்கி வைக்கும் வகையில், முதற்கட்டமாக 288 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 44,800 மாணவ மாணவிகள் பயன் பெற்றிட பள்ளிகளிலுள்ள வகுப்புகளை இணைத்து ரூ.24 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்து பயிலும் திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்தார்.ஆங்கில மொழி அறிவை வளர்த்துக் கொள்ளும் முறையில் உருவாக்கப்பட்டுள்ள “கட்டகம்“முதற்கட்டமாக 1600 பள்ளிகளில் ஒரு கோடியே 19 லட்சம் மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள ஆங்கில மொழி உச்சரிப்புக் கட்டகத்தை ஜெயலலிதா வெளியிட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வீரமணி பெற்றுக் கொண்டார். ஆக மொத்தம் பள்ளிக் கல்வித் துறையில், ரூ.106 கோடியே 8 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பீட்டிலான வளர்ச்சி பணிகளை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி