அடுத்த கல்வி ஆண்டில் இருந்து 10-வது வகுப்புக்கு முப்பருவமுறை கொண்டு வர திட்டம் பொதுத்தேர்வும் ரத்து செய்யும் நிலை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 8, 2014

அடுத்த கல்வி ஆண்டில் இருந்து 10-வது வகுப்புக்கு முப்பருவமுறை கொண்டு வர திட்டம் பொதுத்தேர்வும் ரத்து செய்யும் நிலை.


10-வது வகுப்பில் முப்பருவ முறை கொண்டு வந்து பொதுத்தேர்வை ரத்து செய்யவும் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில்வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமச்சீர்கல்விதமிழ்நாட்டில் மாநில வாரியகல்விமுறை, மெட்ரிகுலேசன் கல்வி முறை, ஆங்கிலோஇந்தியன் கல்வி முறை,உள்ளிட்ட 4 வகையான கல்வி முறைகள் முன்பு இருந்தன.

இவை அனைத்தையும் ரத்து செய்துவிட்டு ஒரே கல்வி முறையாக சமச்சீர்கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. இதனால் பல மெட்ரிகுலேசன் பள்ளிகள் சி.பி.எஸ்.சி. பள்ளிகளாக மாறின. மேலும் 1-வது வகுப்பு முதல் படிப்படியாக 9-வது வகுப்பு வரை முப்பருவ தேர்வு முறை கொண்டு வரப்பட்டது. மாணவர்கள் புத்தகங்களை சுமந்து செல்வது எளிமையாக்கப்பட்டு காலாண்டு வரை உள்ள பாடங்கள் தனியாக அச்சடிக்கப்பட்டு தனி புத்தகங்களாக வழங்கப்பட்டன. அதுபோல அரையாண்டு வரை உள்ள தேர்வுக்கு உரிய பாடப்புத்தகங்கள் தனியாக அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டன. பின்னர் முழு ஆண்டு தேர்வுக்கு உரிய பாடப்புத்தகங்கள் தனியாக அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டன. ஒரு பருவத்தில் உள்ள பாடம் அடுத்த பருவத்தில் இருக்காது.இப்படியாக 3 பருவங்களாக மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வருடம் 9-வது வகுப்பு மாணவர்களுக்கு முப்பருவ பாட புத்தகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 10-வது வகுப்புக்குமுப்பருவமுறையா?இனி தற்போது 9-வது வகுப்பு படிக்கும் மாணவர்கள் 2014-2015 கல்வி ஆண்டில் 10-வது வகுப்பு படிக்கவேண்டும். அவர்களுக்கும் முப்பருவ முறை கொண்டு வரப்படும் என்று பள்ளிக்கூடங்களிலும் மாணவர்கள் மத்தியிலும் பரவலாக பேசப்படுகிறது. மேலும் அடுத்த வருடம் 10-வது வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய பாடப்புத்தகங்கள் 3 பருவங்களாக பிரித்து அச்சடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ரத்து செய்யவும் பரிசீலனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு முறையாக வருகிற பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்படலாம்என்றும் கூறப்படுகிறது. ஆனால் 10-வது வகுப்புக்கு முப்பருவ முறை கொண்டு வருவதற்கு பெரும்பாலான பெற்றோர்கள், ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். காரணம், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இருக்கிறது என்று எண்ணி மாணவர்கள் பயப்பட்டு படிப்பார்கள். இல்லை யென்றால் பிளஸ்-2 தேர்வுக்கு மட்டும்தான் விழுந்து விழுந்து படிப்பார்கள். பிளஸ்-2தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி கண்டிப்பாக குறையும் என்றும் கூறுகிறார்கள். ஏற்கனவே ஐ.ஐ.டி. போன்ற படிப்புகளில் தமிழக மாணவர்களின் சேர்க்கை குறைவாக உள்ளது என்றும் எனவே முப்பருவ முறை 10-வது தேர்வில் அமல்படுத்தக்கூடாது என்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

1 comment:

  1. சும்மாவே நாங்க படிக்க மாட்டோம்,10 TH PUBLIC ரத்து பண்ணினா உருப்புட்ரும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி