பிளஸ் 2 தேர்வு: அறை கண்காணிப்பு பணிக்கு 1,181 ஆசிரியர்கள் நியமனம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 23, 2014

பிளஸ் 2 தேர்வு: அறை கண்காணிப்பு பணிக்கு 1,181 ஆசிரியர்கள் நியமனம்.


இந்தாண்டில் நடைபெற இருக்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், திருப்பூர் மாவட்டத்தில் 23,606 மாணவர்கள் பங்கேற்க இருக்கும் நிலையில், இத்தேர்வுக்கான கண்காணிப்பு பணிக்கு
1,181 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நா.ஆனந்தி வெளியிட்ட செய்தி: பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும் மார்ச் மாதம் 3 ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 59 தேர்வு மையங்களில் 169 மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 22,709 மாணவ, மாணவிகள், தனித்தேர்வர்களாக 897 பேர் என மொத்தம் 23,606 பேர் பங்கேற்க உள்ளனர்.இதற்காக, 7 இடங்களில் வினாத்தாள் கட்டு காப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீஸôர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இப்பொதுத்தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மை கண்காணிப்பாளர்களாக 59 தலைமையாசிரியர்கள், துறை அலுவலர் மற்றும் கூடுதல் துறை அலுவலர்களாக 82 ஆசிரியர்களும், அறை கண்காணிப்பாளர்களாக பணியாற்ற 1,181 ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

மாவட்ட ஆட்சியர், கல்வி அலுவலர்கள் தலைமையில் 177 ஆசிரியர்கள் அடங்கிய பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையத்தில் புகார் பெட்டி வைக்கப்படும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தேர்வு காலங்களில் மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்குமாறு கவனித்துக்கொள்ள வேண்டும் என்றா.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி