தமிழக சட்டப்பேரவையில் 2014 - 2015 பட்ஜெட் தாக்கல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 13, 2014

தமிழக சட்டப்பேரவையில் 2014 - 2015 பட்ஜெட் தாக்கல்.


சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 2014 - 2015 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

திமுக வெளிநடப்பு:தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை புறக்கணித்து திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

ரூ.60 கோடியில் மீன்பிடித் துறைமுகம்:தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டிணம் மீன்பிடித் துறைமுகம் ரூ.60 கோடியில் மேம்படுத்தப்படும்.

காவல்துறைக்கு ரூ.5,186.2 கோடிஒதுக்கீடு:காவல்துறைக்கு வரும் நிதியாண்டில் ரூ.5,186.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இலவச வேஷ்டி, சேலை திட்டத்துக்கு ரூ.499 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நடப்பாண்டு ரூ.1,260 கோடி செலவில் 60 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டப்படும்.

தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்த சென்னையில் அக்டோபரில் சர்வதேச முதலீட்டார்கள் மாநாடு நடத்தப்படும்.

ரூ. 100 கோடி செலவில் 118 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.

சென்னையில் ரூ.105 கோடியில் 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.

சாலை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ. 2,800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.9,235 கிலோ மீட்டர் கிராம சாலைகள் ரூ. 2,308 கோடியில் தார் சாலையாகமாற்றப்படும்.

காவல்துறைக்கு கட்டிடங்கள் கட்ட ரூ.572 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்துக்கு வரும் நிதியாண்டில் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தீயணைப்பு படைக்கு இயந்திரங்கள் வாங்க வரும் நிதியாண்டில் ரூ.189.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறைகளில் தொழிற்கூடங்களை மேம்படுத்த ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சாலை பாதுக்காப்புத் திட்டங்களுக்கு மொத்தம் ரூ.215 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஒதுக்கீட்டு தொகையில் ரூ.65 கோடி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கு பயன்படுத்தப்படும்.

விபத்துப் பகுதிகளைக் கண்டறிந்து திருத்தப் பணியை மேற்கொள்ள ரூ.300 கோடியில் திட்டம்ரூ.300 கோடி திட்டத்துக்கு 2014-15ம் ஆண்டில் ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

6 comments:

  1. கல்வித்துறை அறிவிப்புகள் ஏதும் உண்டா?

    ReplyDelete
  2. Posting pathi mattum yathuvum sollavilli.

    ReplyDelete
  3. Announcement must come in last day(21.2.14) of budget secession.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி