15,000 பி.எட்., பட்டதாரி ஆசிரியருக்கு அரசு பணி வழங்க கோரி மனு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 13, 2014

15,000 பி.எட்., பட்டதாரி ஆசிரியருக்கு அரசு பணி வழங்க கோரி மனு.


தமிழகத்திலுள்ள வேலையில்லா கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி (பி.எட்.,) ஆசிரியர்கள் 15,000 பேருக்கு பள்ளிகளில், அரசு பணிவாய்ப்பு வழங்க வேண்டும்" என
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில், பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த வேலையில்லா கம்ப்யூட்டர் சயின்ஸ் (பி.எட்.,) ஆசிரியர்கள், தஞ்சையைச் சேர்ந்த பாலமுருகன் தலைமையில், 20க்கும் மேற்பட்டோர் நேற்று வந்தனர்.தொடர்ந்து இவர்கள் அளித்த மனுவை கலெக்டர் சுப்பையன் வேறு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்ததால், கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் பிரிவு அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.

மேற்கண்ட கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது: தமிழகளவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி ஆசிரியர்கள் (பி.எட்.,) படிப்பு முடித்து விட்டு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள் வாழ்வாதாரம் பாதித்து, குடும்பம் நடத்த வழியின்றி தவிக்கின்றனர்.அரசு பள்ளிகளில் கம்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு உள்ளது. இவற்றில் போதுமான காலிப்பணியிடங்கள் இருந்தும், அப்பணியிடத்தில் வேலையில்லா பட்டதாரிகளை பணி நியமனம் செய்யாமல், காலம்தாழ்த்தப்பட்டு வருகிறது.அதனால் போதுமான கம்ப்யூட்டர் அறிவு இல்லாமலேயே மாணவ, மாணவியரும் மேற்படிப்பை தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆறாம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.ஸி., வரை தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளிலும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் புதிதாக உருவாக்கப்படும் என, அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், பாடப்பிரிவை உருவாக்காமல் உள்ளனர்.

நடப்பு 2014-15ம் கல்வியாண்டு முதல், கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தை பள்ளிகளில் கட்டாய பாடமாக அறிவித்து, வேலையின்றி தவிக்கும் 15 ,000 பட்டதாரி ஆசிரியர்களை (பி.எட்.,) அரசு பணியில் நியமிக்க வேண்டும். இத்தகைய கோரிக்கையை முதல்வர் ஜெ., நிறைவேற்றி, பணிவாய்ப்பின்றி தவிக்கும் 15,000பேர்களுக்கு, மறுவாழ்வு அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

6 comments:

  1. naan pirantha kaaranthai naane arrium munne(already cv finished candidates)
    neeum vanthu yen piranthai selva magane....................

    ReplyDelete
    Replies
    1. சபாஷ் ....சரியான வார்த்தை.....

      Delete
  2. athan padicha velai illainu theriyuthu, apram yen meentum meentum b.ed padichu private collegea develop panrenga?

    ReplyDelete
  3. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல
    டெட் தேர்வு எழுதிய வருங்கால ஆசிரியர்கள் இரண்டு மூன்றாக்க பட்டுள்ளோம்.
    ( 2013‍‍‍‍‍‍‍‍‍ ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍~ 90 &90,2013~ 55% , 2012க்கு 55%, computersciene ) இவ்வாறு நம் பிரிவால் யாருக்கெல்லாம் கொண்டாட்டமோ??????????????
    posting 15000 than ithula yaaruku thanpaa job????

    ReplyDelete
  4. M.SC COMPUTER SCIENCE - ELIGIBLE FOR INCENTIVE?
    PLS ANY ONE REPLY

    ReplyDelete
  5. U.G B.A - HISTORY

    P.G - M.SC COMPUTER SCIENCE - ELIGIBLE FOR INCENTIVE?
    PLS ANY ONE REPLY

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி