பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தை இரத்து செய்ய வலியுறுத்தி பிப்.9ல் சென்னையில் உண்ணாவிரதம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 7, 2014

பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தை இரத்து செய்ய வலியுறுத்தி பிப்.9ல் சென்னையில் உண்ணாவிரதம்.


பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல் தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக்கிட வேண்டுதல், தொடக்ககல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு
நேரடி நியமன முதுகலை ஆசிரியர் பணியிடத்திலிருந்து ஐம்பது சதவீத பணியிடங்களை பதவியுயர்வு மூலம் வழங்க வேண்டுதல், ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரதம் வருகிற பிப்ரவரி ஒன்பதாம் தேதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெறவிருக்கும் இந்த உண்ணாவிரதத்தில் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வென்றெடுக்க தமது பங்களிப்பை உறுதிசெய்வதன் மூலம் நமது பங்களிப்பு ஓய்வூதிய திட்ட ரத்து உள்ளிட்ட அறிவிப்புகளை எதிர்நோக்கலாம்.அனைத்து மாவட்ட ஒன்றிய நிர்வாகிகளும் உண்ணாவிரத அறப்போராட்டத்தை வெற்றிபெற செய்ய கடும் முயற்சி மேற்கொண்டு திரளான ஆசிரியர்கள் கலந்து கொள்ளவதை உறுதி செய்ய வேண்டுமாறு அன்புடன் வேண்டுகிறோம்இந்த உண்ணாவிரத்திற்கு அனைத்து வகை ஒப்பந்த ஆசிரியர்களையும் முதுகலை ஆசிரியர்களையும் இடைநிலை ஆசிரியர்களையும் சிறப்பாசிரியர்களையும் கலந்து கொள்ள வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி