உண்மை தன்மை அறியும் சான்று கிடைப்பதில் கால தாமதம் : அரசு பணியாளர்கள் தவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 7, 2014

உண்மை தன்மை அறியும் சான்று கிடைப்பதில் கால தாமதம் : அரசு பணியாளர்கள் தவிப்பு


அரசு பணியில்சேர்பவர்களின், கல்விச் சான்றிதழ்கள், உண்மை தன்மை அறிதலுக்காக, சம்பந்தப்பட்ட பல்கலைகளுக்கு, அனுப்பப்படும் போது, ஆட்கள் பற்றாக்குறை காரணமாக காலதாமதம் ஏற்படுவதாக கூறப் படுகிறது.
தமிழக அரசு பணியில்சேருவோர், இரண்டு ஆண்டுகளுக்குள், அதாவது தங்கள், தகுதிகாண் பருவத்திற்குள், தங்களின் கல்விச் சான்றுகள் உண்மையானவை என்பதை நிரூபிக்க வேண்டும்.இதற்காக, அவர்கள் தங்கள் கல்விச் சான்றிதழ் களை, பள்ளி என்றால், அரசு தேர்வுகள் துறைக்கும், கல்லூரி எனில், சம்பந்தப்பட்ட, பல்கலைக் கழகத்திற்கும், உரிய கட்டணத்துடன், உண்மை தன்மை அறிதலுக்காக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை பெற்றுக் கொள்ளும், கல்விஅமைப்பு, அதனுடன் இணைக்கப்படும், அசல் சான்றிதழ் கொண்டு, ஆவணங்களை சரிபார்த்து சான்றளிக்க வேண்டும். இவ்வாறு உண்மை தன்மை அறிதலுக்காக அனுப்பப்படும் சான்றுகள், சில நேரங்களில், விரைவாக வந்துவிடுகின்றன; பலநேரங்களில், மாதக்கணக்கில் இழுத்தடிக்கப்படுகின்றன. குறிப்பாக, பல்கலைக் கழகங்களுக்கு அனுப்பப்படும் சான்றிதழ்கள், காலதாமதமாகவே வந்து சேர்க்கின்றன இதனால், அரசு பணியில் சேர்ந்தோர், சம்பள உயர்வு பெறும் போதும் சிக்கல்கள் ஏற்பட்டுகின்றன.

அதே நேரம், பல்கலைக் கழங்களில், சம்பந்தப்பட்ட பிரிவுகளில், ஆட்கள் பற்றாக்குறை தான், இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. கடந்த, 10 ஆண்டுகளுக்குள் உள்ள சான்றிதழ்கள்விரைவாக, உண்மை தன்மை அறியப்பட்டு, அனுப்பப்படுவதாகவும், அதற்கு முந்தையசான்றிதழ்களுக்கான, ஆவணங்கள் தேடிப்பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதால், காலதாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. இந்த கருத்து உண்மை தான். ஆனால்
    சென்ற ஆண்டு, 2 ஆண்டுகளுக்கு முன் பெறப்பட்ட பட்டயங்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் பல்கலை கழகம் உண்மை சான்று கேட்டு விண்ணபித்து ஒரு ஆண்டு ஆகியும் இதுவரை கிடைக்கவில்லை.
    பல்கலை கழகத்தை தொடர்பு கொண்டால் சரியான பதில் கிடைப்பது இல்லை.

    ReplyDelete
  3. பல்கலை கழகங்கள் கொடுத்த உண்மையான பட்டங்களுக்கு ஏன் பணம் கொடுத்து உண்மை சான்று பெற வேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி