அரசு ஊழியர்கள், பணிக்காலத்தில், மேற்படிப்பு: விடுமுறையில் செல்ல ஊழியர்களுக்கு அரசு கட்டுப்பாடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 22, 2014

அரசு ஊழியர்கள், பணிக்காலத்தில், மேற்படிப்பு: விடுமுறையில் செல்ல ஊழியர்களுக்கு அரசு கட்டுப்பாடு.


அரசு ஊழியர்கள், பணிக்காலத்தில், மேற்படிப்பு படிப்பதற்காக, விடுமுறையில் செல்லும் போது, "விடுமுறை காலம் முடிந்ததும், பணிக்கு திரும்புவேன்' என, பத்திரத்தில் கையெழுத்திட்டு அளிக்க வேண்டும்' என,
மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள், பணிக்காலத்தில் மேற்படிப்பு அல்லது பணி தொடர்பாக, படிக்க விடுமுறையில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வாறு, விடுமுறையில் செல்லும் போது, கடன் மற்றும் பணம் செலுத்த வேண்டியிருந்தால், அதை செலுத்துவதாக உத்தரவாதம் அளித்து, பத்திரம் அளிக்க வேண்டும். இதுதான் தற்போதுள்ள நடைமுறை. ஆனால், சிலர், விடுமுறை முடிந்ததும், பணிக்கு திரும்பாமல்,வேறு வேலைக்கு செல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், மத்திய அரசு இது தொடர்பாக, புது அறிவிப்பை ஒன்று வெளியிட்டுள்ளது.

இதன்படி, படிப்புக்காக விடுமுறையில் செல்பவர்கள், "விடுமுறை முடிந்ததும், மீண்டும் பணியில் சேர்வேன்' என, உத்தரவாதம் அளித்து பத்திரம் அளிக்க வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. இதன்படி, அனுமதிக்கப்பட்ட விடுமுறை முடிந்ததும், அடுத்த நாளே, ஊழியர் பணிக்கு சேர வேண்டும்' என அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி