அரசின் தடையை மீறி சத்துணவு ஊழியர்கள் போராட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 13, 2014

அரசின் தடையை மீறி சத்துணவு ஊழியர்கள் போராட்டம்.


அரசின் தடையை மீறி சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம் தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது.தமிழகம் முழுவதும் 68,000 சத்துணவு மையம்,
34,000 அங்கன்வாடி மையம் உள்ளது. 2.5 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

ஊதியம், ஒய்வூதிய உயர்வு கேட்டு தமிழ்நாடு சத்துணவு மற்றும்அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார் பில் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு பணியாளர்கள், சமையலர்கள், அமைப்பாளர்கள் யாரும் பங்கேற்கக்கூடாது. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சமூகநல துறைமூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.அரசின் இந்த தடை முயற்சியை மீறி சென்னையில் கலெக்டர் அலுவலகம் எதிரே நேற்று மாலை 3 மணிக்கு திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீ சார் குவிக்கப்பட்டனர்.அரசின் உத்தரவை மீறி சென்னை மாவட்ட தமிழ்நாடு சத்துணவு அமைப்பாளர் மற்றும் அங்கன்வாடி பணியாளர் கூட்டமைப்பின் சென்னை மாவட்ட தலைவர் கேசவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வரதராஜன் துவக்கி வைத்தார்.எங்கள் கோரிக்கை நியாயமானது. அதை நிறைவேற்ற அரசு பரிசீலனை செய்யவேண்டும். புதுச்சேரியில் சத்துணவு பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்பட்டது போல், தமிழகத்திலும் நிரந்தரம் செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட தயங்க மாட்டோம். எந்த மிரட்டலுக்கும் அஞ்சமாட்டேம்ÕÕ என்று வரதராஜன் பேசினார். நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். உளவுத்துறை போலீசார் ஆர்ப்பாட்டத்தை ரகசியமாக வீடியோவில் பதிவு செய்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி