முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 12, 2014

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்.


தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிவையில், பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

12 comments:

  1. Tet patri nicayam good news varum

    ReplyDelete
  2. Tet patri nicayam good news varum

    ReplyDelete
  3. Nallathe ninainga nallathe nadakkum

    ReplyDelete
  4. நாளை மட்டும் டெட்டை பற்றி எதும் குறிப்பிடப்படவில்லை என்றால் தமிழகமெங்கும் பற்றி எரியும். பின்னர் அத்துனை ஆசிரியர்களும் குடம் குடமாக தண்ணீர் குடித்தால் மட்டுமே அந்த தீ ஆறும்.
    (சத்தியமா வயித்தெறிச்சலதாங்க சொல்றேன்)

    ReplyDelete
  5. Amanga... Veyil kalathila thanni pancham varama irukka...thayavu seithu ethavathu oru arivippavathu kudunga...

    ReplyDelete
  6. "டெட்' தேர்வில் அதிகமானோர் தேர்ச்சி: 60 ஆயிரம் பேரின் நிலை என்ன?
    --- தின மணி நாளேடு

    அரசு அறிவித்த மதிப்பெண் சலுகைக்குப் பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு 15 ஆயிரம் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களின் பணியிடங்களே உள்ளதால் மீதமுள்ள 60 ஆயிரம் ஆசிரியர்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்த 75 ஆயிரம் பேரும் ஆசிரியர்களாகும் தகுதியை மட்டுமே பெற்றுள்ளனர். இப்போது பணி நியமனம் செய்யப்படுபவர்கள் போக மீதமுள்ளவர்களுக்கு அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பணி நியமனங்களில் முன்னுரிமை கிடைக்கும். மேலும் அடுத்த ஆண்டுக்கான பணி நியமனத்திலும் இவர்கள் பரிசீலிக்கப்படுவார்கள் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இப்போது தேர்ச்சி பெற்ற 75 ஆயிரம் பேருக்கு முதலில் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும். அதன்பிறகே, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கு தனியாக அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு நியமிக்கப்படும் 15 ஆயிரம் ஆசிரியர்களைத் தவிர மீதமுள்ளவர்களின் நிலை என்ன என்று தேர்வர்கள் சந்தேகம் எழுப்பினர்.

    இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியது:

    ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது என்பது 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆசிரியராவதற்கான அடிப்படைத் தகுதி மட்டுமே. அந்த வகையில் இந்த 75 ஆயிரம் பேரும் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியைப் பெற்றுள்ளனர்.

    முதலில் இவர்களுக்கு ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும். பிறகு, பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கான அறிவிப்பு தனியாக வெளியிடப்படும்.

    அறிவிப்பு வெளியிடப்பட்டவுடன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும் பணி நியமனம் கோரி ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் இந்த ஆண்டு "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண், பிளஸ் 2, பட்டப் படிப்பு மற்றும் பி.எட். மதிப்பெண் அடிப்படையில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்பட்டு பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    இடைநிலை ஆசிரியர்கள்: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண், பிளஸ் 2, பட்டயப் படிப்பு அடிப்படையில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    தகுதியான விண்ணப்பதாரர்களில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் போக, எஞ்சியவர்கள் தேர்வு செய்யப்படாதவர்களாகக் கருதப்படுவர்.

    இவர்கள் அனைவரும் அடுத்து நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தங்களது மதிப்பெண்ணை அதிகரிப்பதற்காக ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதலாம்.

    அதேநேரத்தில், ஒரு தேர்வில் பெற்ற தேர்ச்சி ஏழரை ஆண்டுகளுக்குச் செல்லும் என்பதால், அடுத்து வரும் ஆசிரியர் பணி நியமனங்களுக்கும் இவர்கள் விண்ணப்பிக்கலாம். அதோடு, அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பணி நியமனம் பெறுவதற்கான தகுதியையும் இவர்கள் பெறுவார்கள்.

    அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் என்பது அப்போது நடைமுறையில் உள்ள அரசாணையின் அடிப்படையில் இருக்கும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது என்பது பணி நியமனத்துக்காக விண்ணப்பிக்கும் தகுதியை மட்டுமே வழங்கும். பணி நியமனத்தை வழங்காது.

    ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் இன்னமும் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் முடிந்த பிறகு, இதுகுறித்து தெளிவான அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

    கடந்த 2012 ஆம் ஆண்டு காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை விட தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. எனவே, இதில் ஆசிரியர் தேர்வு, தேர்ச்சி பெற்றவர்களின் நிலை போன்ற பிரச்னைகள் எழவில்லை.

    இப்போது 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 29 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டதையடுத்து 46 ஆயிரம் பேர் கூடுதலாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இவர்களில் இப்போது 15 ஆயிரம் பேருக்கு மட்டுமே பணி வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

    ReplyDelete
    Replies
    1. டெட் தேர்வு வைத்ததில் இருந்து செய்தித்தாள்களுக்கு தான் ஒரே கொண்டாட்டம். மனித உணர்வுகளிடம் இவ்வாறு விளையாடுவது நியாயம் இல்லை.
      tamilnadu il tet exam matumaa nadukkuthu. matra entha exam patrium ivvaru vimarsanagal varuvathilaiye. tnpsc exam kuda than niraiya peru eluzhi pass panuranga. pass pana ellarukumaa job poduranga? cut off athigam ullavargaluku than job. apadi irukum pothu 60000 perin nilai ena endru tet exam eluthunavangala patri matum yen intha newspaper kavalai kolkirathu?

      Delete
  7. எவ்வளவு கொடுமை நடத்தப் பட்டாலும் அதையும் காமெடி ஆக்கி களிக்கும் நிலைக்குத் தமிழன் வந்து விட்டான்..

    ReplyDelete
  8. இன்றாவது ஒரு முடிவு கிடைக்குமா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி