ஆசிரியர் தகுதி தேர்வு ஹால் டிக்கெட் தொலைத்தவர்கள் ரோல் நம்பர் அறிய ஏற்பாடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 13, 2014

ஆசிரியர் தகுதி தேர்வு ஹால் டிக்கெட் தொலைத்தவர்கள் ரோல் நம்பர் அறிய ஏற்பாடு.


டிஇடி தேர்வு எழுதியவர்கள் ஹால் டிக்கெட்டை தொலைத்துவிட்டால், அவர்கள் தங்கள் ரோல் நம்பரை தெரிந்துகொள்ள டிஆர்பி ஏற்பாடு செய்துள்ளது.
தமிழகத்தில் இரண்டாவது ஆசிரியர் தகுதித் தேர்வு 2013ல் நடந்தது. அதில் சுமார் 6 லட்சம் பேர் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த மாதம் சான்று சரிபார்ப்பு நடந்து முடிந்தது.இதற்கிடையே, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும் பிசி, எம்பிசி, எஸ்டி, எஸ்சி உள்ளிட்ட இட ஒதுக்கீட் டின் கீழ் வருவோர் டிஇடி தேர்வில் 55% மதிப்பெண் எடுத்தால் போதும் என்று அரசு அறிவித்தது. அதற்கான உத்தரவில் 150க்கு 82 மதிப்பெண்எடுத்தால் தேர்ச்சி என்றும் அரசு உத்தரவிட்டது.ஆசிரியர் தகுதித் தேர்வில் மேற்கண்ட 55 சதவீத மதிப்பெண் எடுத்தவர்களின் பட்டியலை டிஆர்பி தயாரித்து வருகிறது.

55 சதவீதம் மதிப்பெண் போதும் என்று அரசு உத்தரவிட்டதால், டிஇடி தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலானோர் தாங்கள் பெற்ற மதிப்பெண்களை அறிந்து கொள்ள டிஆர்பிக்கு படை எடுத்து வருகின்றனர். அவர்களில் சிலர் ஹால் டிக்கெட்டை தொலைத்துவிட்டதாக அதன் நகல் கேட்டு டிஆர்பிக்கு நேரடியாக வருகின்றனர்.

தினமும் இதுபோல வருவோரின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கிறது.இதை கருத்தில் கொண்டு ஹால் டிக்கெட் தொலைத்தவர்கள் தங்கள்மதிப்பெண்களை தெரிந்து கொள்ள வசதியாக, டிஆர்டி இணைய தளத்தில் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. தேர்வு எழுதியோர், ஹால் டிக்கெட்டை தொலைத்தவர்கள் தங்களின் விண்ணப்ப எண்ணை இணைய தளத்தில் பதிவு செய்தால், அவர்களின் ரோல் நம்பர் அதில் தெரிந்து கொள்ளலாம். அதன் மூலம் பின்னர் மதிப்பெண்களை தெரிந்து கொள்ள முடியும்.

2 comments:

  1. hall ticket iruntha mattum posting potruvangala?

    ReplyDelete
  2. The above news reveals that the candidate scored below 90 Mark in 2013 TET had gone to prepare to next TET after forgeting the 2013 TET. The court also decided the matter in favour to govt decision. The govt itself valuntarily announced mark relaxation to meet political constrain inappropirate time and made confusion.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி