மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கோரி ஞாயிற்றுக்கிழமை தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டஆட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில்நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அதன் ஒருங்கிணைப்பாளர் கு.ராசராசன்தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆசிரியர்கள் கூட்டணி மாவட்டச் செயலாளர் ரா.ஆண்டி, தமிழகஆசிரியர்கள் கூட்டணி மாவட்டச் செயலாளர் ரா.சென்னகேசவன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி மாவட்டச் செயலாளர் செ.கேசவன் உள்ளிட்டபேசினர். கூட்டமைப்பின் மாநிலக் குழு உறுப்பினர்ப.வையாபுரி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். கூட்டு நடவடிக்கைக் குழுவின் செயலாளர் பொன்.ரத்தினர் நன்றி கூறினார்.
கிருஷ்ணகிரியில் பேரணி:
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர்களின்கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கிருஷ்ணகிரி புனித பாத்திமா ஆலயம்அருகே தொடங்கிய பேரணிக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்மா.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மன்றத்தின் மாநிலத் தலைவர்லா.தியோடர் ராபின்சன், தமிழ்நாடு ஆசிரியர்கள் கூட்டணியின்கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் சோ.பொன்நாகேஷ், சு.விஜயகுமார்,தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் மாவட்டச் செயலாளர்ரா.சேகர், தமிழ்நாடு தொடக்க நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கோ.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பேரணி தர்மராஜா கோயில் தெரு, காந்தி சிலை, வட்டச் சாலை வழியாகவட்டாட்சியர் அலுவலக வளாகம் அருகே நிறைவு பெற்றது. மத்திய அரசுக்கு இணையானஊதியத்தை இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். புதியஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடரவேண்டும். தேர்வு நிலை, சிறப்பு நிலைக்கு தனியாக ஊதிய விகிதம் வழங்கி தர ஊதியம்நிர்ணயிக்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.தொடக்கக் கல்வி முறையில் தமிழ் வழிக் கல்வி முறையை தொடர வேண்டும்என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கோஷங்கள்எழுப்பப்பட்டன..
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி