பரங்கிப்பேட்டை ஒன்றிய உயர் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான கற்றல் அடைவுத் திறன் தேர்வுகள் நடத்தப்பட்டது.அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில்
பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள அரசு மற்றும் உதவிபெறும் உயர் தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான கற்றல் அடைவுத் திறன் தேர்வுகள் நான்கு நாட்கள் நடத்தப்பட்டன.மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்குதமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் கற்றல், எழுதுதல், பேசுதல், வாசித்தல், நினைவுத் திறன் போன்ற பல்வேறு அடிப்படை தேர்வுகள், பரங்கிப்பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து பள்ளிகளிலும் நடத்தப்பட்டது.
இத்தேர்வினை வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர் பாலமுருகன், ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு ஆசிரியர்கள் நடத்தினர். மாநில திட்ட இயக்குனர் லதா, கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் அருண்மொழிதேவி, உதவி திட்ட அலுவலர் வெங்கடேசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பரங்கிப்பேட்டை உதவி தொடக்கக் கல்வி அலுவலர் குமார், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சரஸ்வதி லட்சுமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி