"தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் கோரிக்கைகள், தொடர்ந்து, புறக்கணிக்கப்படுவதால், வரும், லோக்சபா தேர்தலில், ஆசிரியர்களின் அதிருப்தி எதிரொலிக்கும்
,'' என, ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைத் தலைவர், செந்தில்குமார் கூறினார்.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின், கூட்டு நடவடிக்கைக் குழுவின், நீலகிரி மாவட்ட கிளை சார்பில், ஊட்டியில், நேற்று, கோரிக்கைப் பேரணி நடந்தது. இதில் பங்கேற்ற, தமிழக ஆசிரியர் கூட்டணியின்மாநில துணைத் தலைவர் செந்தில்குமார், "தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில், 1.75 லட்சம், தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான, ஊதியம் வழங்க வேண்டும் என்ற, எங்களின் கோரிக்கையை, ஆட்சிக்கு வரும், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., அரசுகள், ஏற்க மறுக்கின்றன.
இடைநிலை ஆசிரியர்களுக்கான, ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்ற, கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. தமிழகத்தில், பல தனியார் பள்ளிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமல், தகுதியற்ற நிலையில் இருப்பினும், அவை, தொடர்ந்து இயங்க, அரசுஊக்குவிக்கிறது; இதனால், அரசு பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை குறைகிறது. எங்களின் குறைகளை, சட்டசபையில் பேச, எதிர் கட்சிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் கோரிக்கைகள், தொடர்ந்து, புறக்கணிக்கப்படுவதால், வரும், லோக்சபா தேர்தலில், ஆசிரியர்களின் அதிருப்தி எதிரொலிக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி