ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை அறிவிப்புக்கான அரசாணை விரைவில்.... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை அறிவிப்புக்கான அரசாணை விரைவில்....


கவர்னர் உரைக்கு பதில் அளித்து சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா,ஆசிரியர் தகுதி தேர்வில்இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீத சலுகை மதிப்பெண் வழங்கப்படும்,'
என்று அறிவித்தார். 2013ம்ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவித்தார்.ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 150-க்கு 90 மதிப்பெண் (60 சதவீதம்)எடுக்க வேண்டும். இதில் 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப்பிறகு தேர்ச்சி மதிப்பெண் 82.5மதிப்பெண்ணாக குறைந்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு மதிப்பெண்வினாக்கள் மட்டுமே இடம்பெறும் என்பதால் அரை மதிப்பெண் கிடைக்காது. எனவே, சலுகைக்குப் பிறகு 82 அல்லது 83, இவற்றில் எது தேர்ச்சி மதிப்பெண் என தேர்வர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.சி.பி.எஸ்.இ. நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணிலும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதில் 82 மதிப்பெண் என்பது சலுகைக்குப் பிறகான தேர்ச்சி மதிப்பெண்ணாக சி.பி.எஸ்.இ. நிர்ணயித்துள்ளதாக தேர்வர்கள் தெரிவித்தனர். ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்சலுகை தொடர்பான அரசாணையில் இது குறித்து தெரியவரும்.

இதற்கிடையில் முதல்வர் வெளியிட்ட5 சதவீத மதிப்பெண் சலுகை அறிவிப்புக்கான அரசாணை இன்றோ அல்லது நாளைக்குள்ளோ வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாணையில்தான் தேர்வர்களின் வினாக்களுக்கு விடைகிடைக்கும்.

29 comments:

  1. may be 82markadan irukkum after go.trb relesed to new c.v.candidates

    ReplyDelete
  2. GOVT GO VIL MIGAVUM MUKKIAM WEIGHTAGE MATHIPEN THAN.I THINK THE GOVT GIVE 36 MARKS OR 39 MARKS.IF THE GOVT GIVEN 42 MUNNADI CV MUDICHAVANGA AFFECTED VERY STRONGLY

    ReplyDelete
    Replies
    1. not possible to give 39 marks. Every 15 marks govt. has given one slab. Then how do we expect 39 marks.
      May be slab change like this.
      82 to 96 42 marks from this marks they can be started. We can think all the aspects. Not one way. Like this, it may affect the candidates?????

      Delete
    2. TET Weightage
      1 to 14 = 6
      15 to 29 =12
      30 to 44 =18
      45 to 59 = 24
      60 to 74 =30
      75 to 89 = 36
      90 to 104 =42
      105 to 119 = 48
      120 to 134 = 54
      135 to 150 = 60
      I think this method is correct one.

      Delete
    3. YAA....I also think this one

      Delete
  3. யாரும் பயப்பட வேணாம் 82 பாஸ் தான்.. உங்களுக்கான வெயிட்டேஜ் 36 குடுப்பாங்க.. இப்ப பாஸ் பணுனவங்க அதிகபட்சம் 76 வரை வாங்கி ஏற்கனவே பாஸ் பன்னவங்க கூட போட்டி போடலாம்.... பி.சி ல 75 க்கு கீழ இருக்கவங்களுக்கு வேலை கிடைப்பது சிரமம் தான்...

    ReplyDelete
  4. Pls prepare go don't affect 90 and above mm arks gets candidate .

    ReplyDelete
    Replies
    1. how do u say sir, Because they adopt weightage only. If they follow TET mark u r correct.

      Delete
  5. Cm arivippu job koduthu termination pannitatharkku samam.

    ReplyDelete
  6. cv mudithavargalin pani niyamanam thayar agi kondu ullathu.

    ReplyDelete
  7. நம்பிக்கை இழக்காமல் காத்திருப்போம் நண்பர்களே. அரசு ஆணை வெளிவந்த பின்பு தான் தேர்வு செய்யும் முறையில் என்னென்ன மாற்றங்கள் செய்திருக்கிறார்கள் என்பது தெரிய வரும். அதுவரை பத்திரிகையில் வரும் செய்திகளும் நாம் பகிரும் கருத்துகளும் யூகங்களே.

    ReplyDelete
  8. Govt wil consider relaxation for tet 2012 82 to 89 candidates 1st.

    May drop weightage mode & select based on tet mark as done last year.

    May 2012 tet given 1st preference.

    All shall wait for G.O.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. My friend had scored 84 in 2012 and 81 in 2013. if the relaxation is not given to the 2012 candidate he will be affected vero much.

    ReplyDelete
  11. TET weightage enpathu oru sariyana mathipittu muraiyaka irukkathu een entral veeveru kalakatinkali veeveru mathipitu murai veeveru palkalai kalagankalal pinpatrapatathu .anaivarum ore patathitathi padikkavilai.enave TET mathipen adipadai pani vazhangu vathi sariyana muraiyaka irrukkum. een entral anaivarum orai patathidathi padithuthan exam eluthinarkal.

    ReplyDelete
  12. Yaaravathu reservation pathi sollungalen.ippo 1000postig irukunu vachukita athula oc ku ethana poduvanga?

    ReplyDelete
    Replies
    1. oc kkunu thaniya kidaiyathu. all caste are comes to oc

      Delete
  13. G.O regarding mark relaxation released just now.. TET pass mark for reserved category is 82... watch jaya plus..

    ReplyDelete
  14. GO passed by govt for 5% 82/150 eligble for pass

    ReplyDelete
  15. வெயிட்டேஜ் மதிப்பெண் குறித்த சில குறிப்புகள் விவாதத்திற்காக
    1. 12ஆம் வகுப்பில் வித்தியாசமான பாடத்திட்டங்களைப் படிப்பவர்களுக்கு மொத்த மதிப்பெண்கள் தான் ஒன்றே தவிர ஒவ்வொரு பாடத்தையும் பயிலும் முறையும் மதிப்பிடும் முறையும் வித்தியாசமாக அமைந்துள்ளது.
    2. கல்லூரி படிப்பிலும் வெவ்வேறு பாடத்திட்டங்கள். வெவ்வேறு விதமான மதிப்பெண் வழங்கும் முறை இருக்கிறது.
    3. சில கல்லூரிகளிலும் பல்கலைகழகங்களிலும் வெவ்வேறு எண்ணிக்கையிலான பாடங்கள் அமைந்துள்ளன. சிலருக்கு மொத்தம் 28 தாள்கள். சிலருக்கு 30 முதல் 40 தாள்கள்.
    4. சில கல்லூரிகளில் தமிழ், ஆங்கிலம் மற்றும் முக்கிய பாடம் தவிர பார்ட் 4 பார்ட் 5 என சில சிறப்பு பாடங்கள் (தன்னாட்சி கல்லூரிகளில்) தரப்பட்டு அவற்றிற்கும் மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.
    5. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் ஒரே காலக்கட்டத்தில் படித்தவர்கள் அல்ல. 40 ஆண்டுகளுக்கு முன் பள்ளி கல்லூரி படிப்பை முடித்தவர்களும் உண்டு ( திரு. அறிவுமதி (வயது 58), திரு. ஜனார்த்தனம் (வயது 52) மற்றும் 35 வயதைக் கடந்தவர்கள் பலரும் இப்போட்டியில் ஐக்கியமாகி உள்ளனர். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மதிப்பிடும் முறையில் மாற்றங்கள் இருந்திருக்கிறது.
    6.ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண் எடுத்தவரும் 104 மதிப்பெண் எடுத்தவரும் ஒன்று என (15 மதிப்பெண்கள் சமமென) மதிப்பிடப்படுகிறது.
    7. இடைநிலை ஆசிரியருக்கான தகுதிப் பாடங்களான 12ஆம் வகுப்பு மற்றும் ஆசிரியர் பட்டயப் பயிற்சி (D.Ted) மதிப்பெண்கள் கணக்கிடப்படுகின்றன. அதே போல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதிப் பாடங்களான இளநிலை பட்ட மதிப்பெண் (B.A., B.Sc.) மற்றும் ஆசிரியர் பட்ட மதிப்பெண்கள் (B.Ed) தானே மதிப்பிடப்படவேண்டும். 12ஆம் வகுப்பு மதிப்பெண்ணும் தேவையில்லாமல் ஏன் சேர்த்துக்கொள்ளப்படுகிறது.

    இப்படி ஒவ்வொருவரும் தனித்துவமான கல்வி கற்று மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பொதுவான அளவுகோல் வைத்து மதிப்பிடுவதில் கூடுதல் கவனம் செலுத்தி அரசானை பிறப்பிக்கப்படுமா? மாணவர் மற்றும் ஆசிரியர் நலனில் அக்கறை உள்ள கல்விச்செய்தி போன்ற ஊடகங்கள் (இது போன்ற இன்னும் நண்பர்களின் மனதில் உள்ள தவிர்க்க இயலாத கருத்துகளை) அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று உதவுவார்களா?

    ReplyDelete
  16. sir I am muthukumar sc my Tet mark 81 sir yenaku vera vaipu iruga sir pass panna yenaku fail anathanl valave pitikala sir 1mark pochi sir yenaku increse aguma sir mark yennai nampi than yen family irugu sir...yenna pantrathu nan

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி