நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்களை கணினி பட்டதாரி ஆசிரியர்கள் நிறைவேற்றினர்.
கணினி பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் கலந்தாலோசனை திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் நேற்று நடந்த கணினி பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் கலந்தாலோசனை கூட்டத்தில், வேலூர், கடலூர் காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர் மாவட்ட பட்டதாரிகள், 500 பேர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்:
1.ICT கணினி கல்வி திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பது. திட்டம் முறையாக அறிவிக்கப்படும் சூழலில், ஐகோர்ட்டில் வழக்கு தொடுப்பது. சென்னையில் டி.ஆர்.பி., வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது.
2.ஆறு முதல் பத்த வரையிலான வகுப்புகளுக்கு அறிமுகம் செய்யப்பட்ட கணினி பாடதிட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
3. கடந்த இரண்டு ஆண்டுகளாக முழு நேர ஆசிரியர்களாக பணியாற்றும் பகுதி நேர கணினி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
4. கடந்த ஆண்டு அறிவித்த, ஸ்மார்ட் கிளாஸ்' கல்வி முறையை நடைமுறை படுத்தி, கணினி பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்.
5.நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமனம்செய்ய வேண்டும்.என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்திற்கு வந்திருந்தவர்களிடம், அவர்களின் பயோடேட்டா பெறப்பட்டுள்ளது.கூட்டமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, இந்த பட்டியலில் உள்ளவர்களுக்கு தகவல் உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்.மேலும், கூட்டமைப்பில் இணைய விருப்பம் உள்ளவர்கள் தங்களின் பயோடேட்டாவை,pandiyanve@gmail.comஎன்ற இ–மெயில் முகவரிக்கு அனுப்பி வைத்து, இணைந்து கொள்ளலாம்.குறிப்பு: கட்டணம் ஏதும் கிடையாது.
I will appreciate.Am also cs B.Ed from dharmapuri
ReplyDelete