பார்வையற்ற மாற்றுத்திறனாளி பி.எட் பட்டதாரிகளுக்கு சிறப்புத் தேர்வுக்கு இலவச பயிற்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 12, 2014

பார்வையற்ற மாற்றுத்திறனாளி பி.எட் பட்டதாரிகளுக்கு சிறப்புத் தேர்வுக்கு இலவச பயிற்சி.


பார்வையற்ற மாற்றுத்திறனாளி பி.எட் பட்டதாரிகள் சிறப்பு தகுதித் தேர்வில் எளிதாக தேர்ச்சி பெறும் வகையில் அந்தந்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிலையங்களின்
சார்பில் இலவச பயிற்சி அளிப்பதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள பி.எட் படித்து பணியில்லாமல் இருக்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதாக பணி கிடைக்கும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வு எழுத விண்ணப்பிக்கிறவர்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி நிலையங்களில் சிறப்பு பயிற்சி அளிப்பதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் இத்தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்துள்ளவர்கள் மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலகத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இவர்களுக்கான இப்பயிற்சி வகுப்பு விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வருகிற 22-ம் தேதி தொடங்கி, தேர்வுக்கு முதல் நாள் வரையில் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. எனவே இந்த வாய்ப்பை பார்வையற்ற மாற்றுத்திறனாளி பட்டதாரிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

2 comments:

  1. Thank you sir, But intha choaching Madurai, Virudunager, and ...... lam start pana plan panitanga,
    But,
    Dindigul, Theni, ponra Dist kalil G.O inum varavilai (enkirargal). So, quick ah G.O va pass pani ella Dist kalilum Start panaa.... Nama Friends kum romba benefit ah irukum... Mukiyamaka Blind Friends ku, avargal ipa irunthe Padika Start pana than Exam easya atten pana mudiyum, So, well. thk u sir.

    ReplyDelete
  2. I am arun ph candidate(ortho).Intha special tet exam blind candidates kku mattuma ella ph(ortho) kkum unda therincha sollunga frnds.my cell no-9751182934.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி