மருத்துவ படிப்பிற்கு கூடுதல் இடங்கள்: அமைச்சர் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 8, 2014

மருத்துவ படிப்பிற்கு கூடுதல் இடங்கள்: அமைச்சர் அறிவிப்பு.


நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணி்க்கை பற்றாக்குறை நிலவுவாதல் கூடுதலாக 15 ஆயிரத்து 800 இடங்கள் உருவாக்கப்பட உள்ளது. என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது:

நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ற விதத்தில் மருத்துவர்கள் இல்லை. தற்போதைய சூழ்நிலையில் ஆயிரத்து 700 மக்களுக்கு ஒரு டாக்டர் என்ற விகித்ததி்ல் மட்டுமே உள்ளனர். இதன் மூலம் பற்றாக்குறையை சரிசெய்யமுடியாது. இதற்காக வரும் 12 மற்றும் 13-வது தி்ட்ட காலங்களில் கூடுதலாக நாடு முழுவதும் 187 மருத்துவ கல்லூரிகள் துவங்கப்படும். இதற்காக மத்திய அரசு மாவட்ட தலைமை மருத்துவனைகளில் தரம் உயர்த்த முடிவு செய்துள்ளது.

மேலும் இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான இடங்களையும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக மருத்துவக்கல்லூரிகள் துவக்குவதற்கு தேவையான ஆசிரியர் மாணவர் விகிதம், தேவைப்படும் நிலம், படுக்கை எண்ணிக்கை, சேர்க்கை திறன் போன்றவற்றில் உள்ள கட்டுப்பாடுகள் திருத்தப்பட உள்ளது. என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி