சம்பளம் தாமதம்: பகுதிநேர ஆசிரியர்கள் திண்டாட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 8, 2014

சம்பளம் தாமதம்: பகுதிநேர ஆசிரியர்கள் திண்டாட்டம்.


ஒவ்வொரு மாதமும் சம்பளம் தாமதமாக வழங்கப்படுவதால், பகுதி நேர ஆசிரியர்கள் அவதியடைந்துள்ளனர்.
ராமநாதபுரம், பரமக்குடி கல்வி மாவட்ட பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களில், ரூ.5000 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பகுதி நேர கலை, பட்டதாரி, உடற்கல்வி ஆசிரியர்கள் 256 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குரிய சம்பளம் ஒவ்வொரு மாதமும் 5ம் தேதி வழங்க வேண்டும். ஆனால், மூன்றாவது வாரத்தில் தான் வழங்கப்படுகிறது.

பகுதி நேர ஆசிரியர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஜெயகணேஷ்: எங்களுக்கு வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. மாதம் 5ம் தேதி வழங்க வேண்டிய சம்பளம், ஒவ்வொரு மாதமும் 20 தேதிக்கு பின்னரே கணக்கில் சேர்க்கப்படுகிறது. 30 கி.மீ., தூரம் சென்று பணியாற்றும் எங்கள் நலன் கருதி,7ம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும்.

அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரி ஒருவர் கூறியதாவது: பகுதி நேர ஆசிரியர்களுக்குரிய சம்பளத்தை, அவர்களது வங்கி கணக்கில் ஒவ்வொரு மாதமும் தாமதமின்றி செலுத்துகிறோம். பட்டுவாடா செய்வதில் வங்கிகள் தாமதிக்கின்றன' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி