தேசிய திறனாய்வு தேர்வு: கேள்வித்தாள் இல்லாததால் தேர்வு நேரம் மாற்றியமைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 22, 2014

தேசிய திறனாய்வு தேர்வு: கேள்வித்தாள் இல்லாததால் தேர்வு நேரம் மாற்றியமைப்பு.


பல மாவட்டங்களில்,கேள்வித்தாள் கட்டுகளை ஏற்றிய வாகனங்கள்,குறிப்பிட்ட மையத்திற்கு செல்லாததால்,பள்ளி மாணவர்களுக்கு,இன்று காலை,நடக்க இருந்த தேசிய திறனாய்வு தேர்வு,
பிற்பகல், 2:00மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும்பள்ளிகளில்,எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ,மாணவியர்,மத்திய அரசின் கல்வி உதவித் தொகையை பெறுவதற்காக,இன்று காலை, 10:00மணிக்கு,தேசிய திறனாய்வு தேர்வை நடத்த,தேர்வுத் துறை ஏற்பாடு செய்திருந்தது.இந்த தேர்வை, 1.6லட்சம் பேர் எழுத இருந்தனர். கடைசி நேரத்தில்,கேள்வித்தாள் அச்சிடப்பட்டதால்,அவை,நேற்றிரவு வரை,தேர்வு மையங்களுக்கு சென்று சேரவில்லை. இதனால்,இன்று காலை, 10:00மணிக்கு நடக்க இருந்த தேர்வை,பிற்பகல், 2:00மணிக்கு தள்ளிவைத்து,தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இந்த விவரம்,முதன்மை கல்வி அலுவலர்கள் மூலமாக,இன்று காலை,மாணவர்களுக்கு அறிவிக்கப்படும்.

1 comment:

  1. இங்க கூட குழப்பமா ?எல்லாவற்றிலுமே தாமதமா?... அட கடவுளே

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி