நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் இன்றும் நாளையும் ஸ்டிரைக். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 12, 2014

நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் இன்றும் நாளையும் ஸ்டிரைக்.


வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து, மத்திய அரசு ஊழியர்கள், பஞ்சப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து வழங்க வேண்டும் உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,
இன்றும் நாளையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.இதில் நாடு முழுவதும் 12 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். இதுகுறித்து வருமானவரி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வெங்கடேசன் கூறியதாவது:

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7வது ஊதியக்குழு அமைக்கப்படுமென்ற ஒரு அறிவிப்பை மத்திய நிதிஅமைச்சர் வெளியிட்டார். மத்திய அரசு கேட்டுக் கொண்டபடி, கடந்த ஆண்டு அக்டோபர் 25ம் தேதி சம்பள வரையறை குறித்து ஊழியர் தரப்பும் அரசுக்கு இறுதி செய்து வழங்கியது. ஆனால் அரசு சம்பளக் குழுவில் உறுப்பினர்களை நியமிப்பது குறித்தோ, பஞ்சப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது குறித்தோ, இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்தோ எந்த முடிவும் எடுக்கவில்லை.எனவே, மத்திய அரசு ஊழியர் சம்மேளனத்தின் அகில இந்திய செயற்குழு கடந்த மாதம் டெல்லியில் கூடி பிப்ரவரி 12 மற்றும் 13ம் தேதிகளில் வேலை நிறுத்தம் செய்வதென்று முடிவெடுத்தது.அதன்படி, இன்றும், நாளையும் நாடு தழுவிய 2 நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. அகில இந்திய அளவில் 105 சங்கங்களை சேர்ந்த 12 லட்சம் பேரும், தமிழக அளவில் 45 சங்கங்களை சேர்ந்த 2 லட்சம் பேரும், இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி