பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தமிழ் கட்டுரை வினாக்களில் மாற்றம் : ஆசிரியர்கள் வேண்டுகோள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2014

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தமிழ் கட்டுரை வினாக்களில் மாற்றம் : ஆசிரியர்கள் வேண்டுகோள்


10ம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாளில் எட்டு மதிப்பெண் பெறும், பொதுக்கட்டுரை குறித்த வினா கேட்கப்படுகிறது. இரண்டு தலைப்புகளில் மட்டுமே வினாக்கள் கொடுக்கப்படுவதால்
கட்டுரை எழுத மாணவர்கள் கடும் சிரமமடைகின்றனர். இதுகுறித்து தமிழாசிரியர் கழக மாநில துணை செயலாளர் இளங்கோ கூறுகையில், ‘‘ சமச்சீர் கல்வி பாடப்புத்தகத்தில் 10 தலைப்புகளில் பொதுக்கட்டுரை உள்ளது. ஆனால் இவற்றில் இருந்து கேட்பதைவிட பழைய பாடத்திட்டத்தில் இருந்தே கட்டுரை வினாக்கள் அதிகம் கேட்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் ஏராளமான மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர்.சில நேரங்களில் பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டு கட்டுரைக்குரிய வினாக்கள் கேட்கப்படுகிறது எனவே சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில் இருந்து பொதுக்கட்டுரை வினாக்கள் உரைநடையிலும், செய்யுளிலும் தலா நான்கு இடம் பெறும் வகையில் வினாத்தாளில் மாற்றம் செய்ய வேண்டும்‘‘ என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி