ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம், அரசாணை ரத்து கோரி வழக்கு: அரசுக்கு நோட்டீஸ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 15, 2014

ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம், அரசாணை ரத்து கோரி வழக்கு: அரசுக்கு நோட்டீஸ்


ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய் யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை ஆலப்பாக் கம் பகுதியை சேர்ந்த

பிரியவதனா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத் தில் தாக்கல் செய்தவழக்கில் கூறியிருப்பதாவது:

ஆசிரியர் தகுதி தேர்வை அரசு நடத்தி வருகிறது. இதில் வாங்கிய மார்க் அடிப்படையில் மட்டும் ரேங்க் பட்டியல் தயாரித்து அதன் அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்க வேண்டும்.ஆனால் அரசு கடந்த 2012ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையின்படி தகுதி தேர்வு மார்க் தவிர மற்ற பட்டய படிப்பு, பட்டப்ப டிப்பு, பிளஸ் 2 மார்க் ஆகியவற்றிற்கு தனி மார்க் கொடுக்கிறார்கள். இதனால் அதிகமாக மார்க் வாங் கிய நான் பாதிக்கப்பட்டுள்ளேன்.

எனவே தகுதி மார்க் தவிர மற்ற படிப்பை கணக்கிட்டு மார்க் வழங்க வேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் வழக்கில் கூறியுள்ளார். இந்த வழக்கை நீதிபதி சுப்பையா விசாரித்தார். மனுதாரர் சார்பில், வக்கீல் நாமோ நாராயணன் ஆஜா ரானார். வழக்கை விசாரி த்த நீதிபதி வரும் 28 ம் தேதி அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத் தரவிட்டார்.

33 comments:

  1. Replies
    1. இந்த வெக்கங்கெட்ட வெயிட்டேஜ் முறை எப்படி இருக்கிறது என்றால் ஓட்ட பந்தையத்தில் கஷ்ட்டப்பட்டு முதலில் வந்த வீரனிடம் " நீ பத்து வருடங்களுக்கு முன் சரியாக ஓடவில்லை அதனால் உனக்கு பரிசு கிடையாது" என்று சொல்வது போல் உள்ளது.

      வெயிட்டேஜ் என்ற அஸ்திவாரம் இல்லாத அபாய கோட்டையின் களிமண்ணால் செய்யப்பட்ட கற்கள் இப்போது தான் ஆட்டம் காண ஆரம்பித்திருக்கிறது.

      கூடிய விரைவில் இந்த கோட்டை சுக்கு நூறாக இடிந்து விழுந்து இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

      "மாற்றம் ஒன்றே நிலையானது"

      Delete
    2. அனைவருக்கும் எனது இனிய வணக்கம்.
      அனைவரும் நன்றாக கவனியுங்கள்
      நாம் ஒருவரை ஒருவர் குறை சொல்லுவதை நிறுத்திவிட்டு
      அரசின் நடவடிக்கையை கவனியங்கள்
      28/01/2014 அன்று cv நடத்தி முடிக்கப்பட்டது.
      03 /02 /2014 ல் 5% மதிப்பெண் சலுகை. அதன் பிறகு 11 நாட்களுக்கு பிறகு
      14/02/2014 ல் 82 to 89 க்கு waitage marக். இப்படியே போனால்
      82 to 89 க்கு cv எப்போது?
      அதன் பிறகு பணி நியமனம் எப்போது ?
      நன்றாக சிந்தியுங்கள்''''
      82 லிருந்து 150 மதிப்பெண் பெற்ற அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் யாருக்காவது வேலை கிடைக்கும்.
      இல்லையென்றால்
      நமது நிலை ????????????????????????????????????????

      Delete
  2. Super priya vathna mam...oru nalla answer kidaikanum nu pray pantren...idthu arasin kolgai mudivu nu sonna all teacher's poraduvom...jaikum varai poraduvom...I am heartly thanks ur case

    ReplyDelete
  3. Ethukuppa intha kulappam TET Pass pannavangaluku TRB announce pannunga. All the prob are to be solved

    ReplyDelete
  4. இவங்க இந்த வெயிட்டேஜ் முறைக்கு சம்மதம்னு ஒத்துகிட்டுதான சான்றிதழ் சரிபார்ப்புக்கு போனாங்க.இப்போ இவங்க தேர்வாகலேன்னு இந்த அரசு ஆணையை ரத்து செய்ய சொல்றாங்க.இவ்ளோ நாள் என்ன செஞ்சாங்க?

    ReplyDelete
    Replies
    1. hello officer, we sign under the condition that pass % also 60. now they changed. so that are all no reason. Only one thing can say that is govt. policy. But if case file then can win very easily.. But due to other candidates it should not be put up.

      Delete
    2. பாதிக்கப்படும் அனைவரும் நீதி மன்றம் சென்று தங்கள் உரிமையை பெறலாம். ஆனால் 2012 இல் போடப்பட்ட அரசாணையை எதிர்த்துதான் இந்த வழக்கு போடப்பட்டுள்ளது.
      என்னுடைய சந்தேகம்
      இந்த அரசாணையை பற்றி முன்பே தெரிந்திருந்தால் ஏன் இந்த வழக்கை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு முன் தொடுக்கவில்லை.
      ஒரு வேலை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பிறகு தெரிந்திருந்தால் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதி பட்டியல் வெளியிடும் முன்பே இவர் எப்படி தான் தேர்வு செய்யப்படவில்லை என்று தன் மனுவில் குறிபிட்டுள்ளார்.
      தமிழக அரசு நடத்தும் தகுதி தேர்வு ஆசிரியர்களை நேரிடையாக தேர்வு செய்யும் போட்டி தேர்வு கிடையாது என்ற அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் இவருக்கு ஏன் தெரியவில்லையா?

      உங்களுக்கு சந்தேகம் இருந்தால் இவருடைய மனுவில் தெரிவித்திருக்கும் விபரங்களை பார்க்க
      http://www.kalviseithi.net/2014/02/blog-post_7873.html

      Delete
  5. epa pa seletion list vitanga? thervaagavilai enru solukirargal enakku onrum puriyavilai

    ReplyDelete
  6. சான்றிதழ் சரிபார்ப்பு நடவடிக்கையில் பங்கேற்றேன். ஆனால், ஆசிரியர் பணி நியமனத்துக்கு நான் தேர்வாகவில்லை. பிரியவதனா எதை வைத்து இவ்வாறு கூறுகிறார்?

    ReplyDelete
  7. Piriyavadhana court abardham Rs,10000 /- ready pani vachikunga Monday katra mari irukum

    ReplyDelete
    Replies
    1. neethi kettal abardhama, enna sir pesuringa, nangalum than case poda pogirom.

      Delete
  8. Neethi kidaikum ...priyavathna ...don't feel all comments. ..god bless you..

    ReplyDelete
    Replies
    1. nanum ivvaru weitage la pathikka pattullen antha case la nanum inaya thayar court 100000 fine pottalum katta thayar

      Delete
  9. Hello priyadharshini and birav first u understand weightage must need but weightage should follow each mark thats only she put the case she dind expect seniority u dont afrid

    ReplyDelete
    Replies
    1. Mr. sundaram , u first understand my question. i asked my doubt , is trb publised any selection list?

      Delete
  10. Ms. priyavadhana ,it is a good point to be argued since the candidate who got 104 marks and 90 also got the same weightage. why this discrepancy....let us believe that court will give good judgement in this regard. Govermnet cannot say this as so called " kolgai mudivu" bcoz this to be calculated on the basis of each mark scored.
    I think the team who formulated weightage system had overlooked .

    ReplyDelete
  11. selection list ae varala then epdi intha madam select agalanu case file panunanga...stupid lady...

    ReplyDelete
  12. 104 varaikum 48 marks nu weightage kuduthurunthalum neenga ellam case poduvenga y 103 varaikum ethuthavangaluku 42 weightage nu..apdi patha trb entha mark um fix pana mudiyathu ipdiye fight panite than irupenga..oru full stop vaikamatenga...y 10 th exam la 35 edukamudiyathu 34 than eduka mudiyum nu fight pana vendiyathu thana..appo y summa irunthenga..10 th 35 edutha than pass..34 edutha oru mark than kaminu pass solla mudiuma?

    ReplyDelete
  13. Don't tell no chance. There will be a lot of chance. G.O. can be newly amended.

    ReplyDelete
  14. இது வெறும் தகுதி தேர்வு தான் இதை வைத்து பணி நியமனம் கோர முடியாது என்று அரசாணை 252 ல் தெளிவாக குறிப்பிட்டு தானே tet தேர்வையே நடத்தினார்கள்.

    அதை கூட புரிந்து கொள்ளாமல் tet மதிப்பெண்ணை கொண்டு மட்டுமே பணி நியமிக்க வேண்டும் என்று கூறுவது முட்டாள்தனம்

    இந்த மனு தள்ளுபடி செய்ய படுவதோடு அபராதமும் விதிக்கப் படும்

    வேண்டுமானால் weightage முறையில் சிறிது மாற்றம் செய்யுங்கள், அதாவது

    55%-60%=39
    60%-65%=42
    65%-70%=45
    70%-75%=48
    -------------
    --------------
    என்பதை போன்று கணக்கிட வேண்டும் என்று வேண்டுமானால் வாதாடலாம்.

    இதை கூட அரசாங்கம், போட்டி அதிகமாக உள்ளது என்ற காரணத்தால் ஒத்துக்கொண்டால்தான் உண்டு.

    இல்லை இது தேர்வு நடத்துவதற்க்கு முன்பே வரையறுக்கப் பட்ட அரசாணை எனவே பிரியவதனா 104 மதிப்பெண் எடுத்து விட்டார் என்பதனால் இதை மாற்றாம் செய்ய இயலாது என்று வாதாடி மறுத்தும் விடலாம்

    ReplyDelete
  15. Mani arasu sir ...epdi eppadi ellom yosikiringa...wtage mmm...super...ponga thami...nanga ellam palla pera pathavanga...awwawwaww..


    Mudiyala..

    ReplyDelete
    Replies
    1. நீங்க பல பேர பார்த்தவர் என்றால் நான் இந்த 28 வயசுல லட்சக்கணக்கான பேர பார்த்து இருக்க தலைவரே! (எனக்கென்ன கண்ணு குருடா?)

      பிரியவதனா 104 மதிப்பெண் எடுத்து விட்டார் என்பதர்க்காக tet மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் வேண்டும் வழக்கு தொடர்வாராம்
      திரு அங்குசாமி அதை ஆசீர்வதிப்பாரம்!(god bless you------------------ are you church father?)

      அதனால இந்த வழக்குல அவருக்கு வெற்றி கிடைச்சிடுமாம்!

      நாங்க ஏதும் பின்னோட்டம் இடக்கூடாதாம்.

      அங்கு sir நானும் tet ல் 103 மதிப்பெண் தான். ஆனா நமக்கு எது வசதியா இருக்குமோ அந்த மாதிரியெல்லாம் அரசாணையை மாத்திக்க முடியாது sir.

      Delete
    2. Mani sir, en age 33.. 1981 birth. .+2 la 923 mark ...get 9 , dted la 79%..get 25...tet la 96.get 42 totally my weightage 76...but ..+2 Mark than90% JOB a mudivu pannuthu illaya..appuram ethuku dted course? 96 days teaching practice? 14 subject ? Tet exam? Straitta +2 Mark base la posting podalamay? first group I mean maths& science groups ku important kodunga? Athan mani sir priya vathanavukku support pannen..thappa? Sollunganne..sollunga...

      Delete
    3. அங்கு sir, நான் +12 ல இயற்பியல் 195,வேதியியல் 190,உயிரியல்185 கணிதம் 178, தமிழ் 163,ஆங்கிலம் 142 பெற்று உள்ளேன்.பொறியியல்,மருத்துவம் போன்றவற்றிலும் ஓரளவு நல்ல கட் ஆஃப் பெற்றேன்.
      ஆனால் வாழ்க்கையில் வறுமையும்,ஏழ்மையும் என்னை ஆசிரியர் பயிற்சி படிப்பை நோக்கி தள்ளியது.

      நிறைய நேரங்களில் ஒரு வேலை உணவுக்கே வழி இல்லாமல் இருந்த நேரம் உண்டு.

      தினமும் 10 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றுதான் படித்தேன்.அப்பொழுது மிதிவண்டி வாங்க கூட கஷ்டம்.இப்படிப் பட்ட சூழ்நிலையில் வாங்கினேன் பட்டம்.எங்கள் பரம்பரையின்‌ முதல் பட்டதாரி.

      இப்படி கஷ்டப்பட்டு dted, 2005 படித்து முடித்து பதிவு செய்து காத்திருந்தால்,மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் வேலை என்ற G.O வந்தது.

      ஒருவேளை உனக்கு கஷ்டப்படும் நான் சாதிப்பிரிவிலும் சலுகை பெற முடியவில்லை.ஏனென்றால் நான் BC.

      bc க்கு வாய்ப்பே இல்லையென்று சொன்னார்கள்.எனக்கு கொஞ்சம் கற்பனைத் திறன் உண்டு என்பதால் சினிமாவில் சேர்ந்து ஏதாவது ஒரு வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என்று சென்னை சென்றால், அங்கு ஏற்கனவே 50 வயதில் ஆயிரங்கணக்கான மணியரசன்‌(கள்) இருந்தனர்.

      பல்வேறு சோதனைகளுக்கு நடுவிலும் திரைத்துறை ஆசை விடவில்லை.

      avm ஸ்டூடியோ வில் செகியூரிட்டி வேலை வாங்கவே ஏகப் பட்ட போட்டி.

      இந்த சூழ்நிலையிதான் 2012 டெட் வந்தது. இதைப்பற்றி எந்த செய்தியையும் தெரிந்து கொள்ளாமல், படிக்காமல் தேர்வு எழுதினேன்
      75 மதிப்பெண் வந்தது.

      அப்பொழுது ஒரு ஆசிரியர் என்னிடம் சொன்னார் tet தேர்வில் வென்றாலும் மாநில பதிவு மூப்பின் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்குவார்கள். ஒருவேளை டெட் தேர்வில் தோல்வி அடைந்தாலும் பணி நியமனம் பெற்ற 5 ஆண்டுகளுக்குள் tet தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பது அரசாணை என்று சொன்னார்.

      இந்த மன நிலையிலேயே tet 2012 மறு தேர்வையும் படிக்காமலே எழுதினேன்.84 மதிப்பெண் பெற்றேன்.

      அதில் வெற்றி பெற்றவர்கள் பணி நியமன ஆணை பெற்ற பிறகுதான் tet மகத்துவம் புரிந்தது.
      அழுதேன், அழுது கொண்டே இருந்தேன் 2 நாள் வரை.

      இப்படியாக சரியான வழி காட்டுதல் இல்லாமல், தட்டு தடுமாறி படித்து இந்த tet தேர்வில் தாள் 1=95, weightage79, தாள் 2 =103, weightage77(தமிழ்) பெற்று,CV முடித்து, வாழ்வில் தூரத்தில் ஒரு புள்ளி தோன்றியபோது, 5% சதவீதம் தளர்வு என்று சொல்லி மரண பயத்தை உண்டு பண்ணினார்கள்.இன்னும் ஏகப்பட்ட மரண பயத்தை உண்டு பண்ணுகிறார்கள்.இரவில் தொக்கமே வரமாட்டேங்குது.

      நான் எப்பொழுது திருமணம் செய்து கொள்வது? எப்படி என் குடும்பதை காப்பாற்றுவது? எனது அக்கா பசங்களை எப்படி படிக்க வைப்பது?

      சொல்லுங்கள் அங்குசாமி, நீங்கள் உங்கள் வசதிக்கு தகுந்தாற்போல் அரசாணையை மாற்ற நினைத்து வழக்கு பதிவு செய்து கொண்டே போனால் என் போன்றோரின் நிலைமை என்ன ஆவது!

      நானாவது பரவாயில்லை. வயது சற்று குறைச்சல் 28 தான் ஆகிறது.
      எனக்கு தெரிந்து ஒருவர் இருக்கிறார் weightage 68 வைத்து கொண்டு,எப்படியேனும் ஆசிரியர் வேலை வாங்கி விட வேண்டும் என்று 45 வயதில்!

      maniyarasan1050@gmail.com

      Delete
    4. Sorry mani sir., ungaluku neenga..patta kastathikku nallathe nadakum..enaku marriage agi Praveen 5th padikiran..varsha ku 2 vayasu achu...after marriage than dted muduchan...ungalukku JOB kidachu marriage nadaka I am pray for u

      Delete
    5. mani sir i too in the same boat but senior to u i pray god for everything god is with us

      Delete
  16. பெப்ரவரி 24 அல்லது மார்ச் 1 போஸ்டிங் ..... அதே வெயிடேஜ் முறை ... 82-89 கு ஏப்ரல் இல் சான்றிதழ் சரிபார்ப்பு.. இது தான் நடக்கும்..

    ReplyDelete
  17. கண்டிப்பாக மணியரசன் உங்களுக்கு வேலை கிடைக்கும்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே! உங்களுக்கும் வேலை கிடைக்க இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்

      Delete
  18. weitage muraiyil +2 Mark serpaanga endru munbe therinthirundhal D T Ed padithirukka maattom.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி