"பகுதி நேர, பி.இ., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பம், வரும் 19ம் தேதி முதல் ஏப்ரல் 7ம் தேதி வரை வழங்கப்படும்" என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கோவை, சேலம், நெல்லை, பர்கூர், வேலூர் ஆகிய இடங்களில் உள்ள, அரசு பொறியியல் கல்லூரிகள், காரைக்குடி - அழகப்பா பொறியியல் கல்லூரி, கோவை - பி.எஸ்.ஜி., கல்லூரி, கோவை - இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மதுரை - தியாகராஜர் பொறியியல் கல்லூரி மற்றும் சென்னையில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஆகிய 10 கல்லூரிகளில், விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் எஸ்.சி., அருந்ததியர் பிரிவு மாணவ, மாணவியர், 150 ரூபாய்க்கும், இதர பிரிவினர், 300 ரூபாய்க்கும், "செயலர், பகுதி நேர, பி.இ., - பி.டெக்., சேர்க்கை, கோவை" என்ற முகவரிக்கு வங்கிக் காசோலை எடுத்து வழங்கி விண்ணப்பங்களை பெறலாம்.மே மாதம், கலந்தாய்வு நடக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஏப்ரல், 7ம் தேதிக்குள், "செயலர், பகுதி நேர பி.இ., - பி.டெக்., சேர்க்கை, கோவை தொழில்நுட்ப கல்வி நிறுவனம், கோவை - 641014" என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி