தேர்தல் தேதி இன்று அறிவிப்பு: தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 5, 2014

தேர்தல் தேதி இன்று அறிவிப்பு: தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமல்.


மக்களவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது. ஏப்ரல் 7 முதல் 10ம் தேதிக்குள் முதல் கட்ட வாக்குப்பதிவு நடக்கும் என்று தெரிகிறது.தற்போதுள்ள 15வது மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 1ம் தேதியுடன் முடிகிறது.
எனவே, மே 31ம் தேதிக்குள் புதிய மக்களவை அமைக்கப்பட வேண்டும். இதற்கான தேர்தலை நடத்த, தேர்தல் ஆணையம் பல மாதங்களாக ஏற்பாடு செய்து வருகிறது. இந்த ஏற்பாடுகள் முழு வீச்சில் முடிக்கப்பட்டு விட்டதை தொடர்ந்து, தேர்தலுக்கானதேதியை தேர்தல் ஆணையம் இன்று காலை 10.30க்கு டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் அறிவிக்க உள்ளதாக அரசு வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் தலைமையில் நேற்று நடைபெற்ற தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டத்தில், தேர்தல் தேதி, எத்தனை கட்டங்களாக வாக்குப்பதிவை நடத்துவது, பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில், இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவை நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும், இதை 6 கட்டங்களாக குறைப்பது பற்றியும் கடைசி நேர முயற்சியாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக அந்த வட்டாரங்கள் கூறின. முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 7 முதல் 10ம் தேதிக்குள் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது மேலும், மக்களவை தேர்தலுடன் ஆந்திரா, சிக்கிம், ஒடிசா ஆகிய மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வருகின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி