பிளஸ் -2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் முகாம் அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய 12 கட்டளைகள்: கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 11, 2014

பிளஸ் -2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் முகாம் அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய 12 கட்டளைகள்: கல்வித்துறை உத்தரவு.


பிளஸ் -2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் முகாம் அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய 12 கட்டளைகளை கல்வித்துறை பிறப்பித்துள்ளது.
பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி வரும் 21ம் தேதி தொடங்க உள்ளது. விடைத்தாள் மதிப்பீட்டு பணி தொடர்பாக முகாம் அலுவலர்களுக்கு 12 கட்டளையை கல்வித்துறை பிறப்பித்துள்ளது அதில் கூறியிருப்பதாவது: பள்ளியில் மதிப்பீட்டு பணிக்கு போதுமான அறைகள், தளவாடங்கள், ஆண், பெண் இருபாலாருக்கும் தனித்தனி கழிவறைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், தடையற்ற மின் வசதி போன்ற அனைத்து வசதிகளும் உள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். முகாம் நடைபெறும் பள்ளியை சேர்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் எவரும் மதிப்பீட்டு பணி நடைபெறும் நேரத்தில் பள்ளி வளாகத்தில் இருக்க கூடாது. மையங்களில் ஜன்னல்கள் உட்புறமாக பூட்டப்பட்டு பலகைகளால் மறைக்கப்பட்டிருக்க வேண்டும், விடைத்தாள் கட்டுகள் ஈரக்கசிவு, வெப்பத்தால் பாதிப்பு, எதிர்பாராதவிதமாக மழை பெய்தல் இவைகளினால் சேதமடையாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,மதிப்பீட்டு அறைகளில் எலிகள், கரையான், பூச்சிகள் நுழைந்து விடைத்தாள்களை சேதப்படுத்தாமல் இருக்க தடுப்பு வழிமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். முகாம் வளாகத்தில் ‘புகை பிடிக்காதீர்‘ என்பதை சுவரொட்டிகளாக தேவையான இடங்களில் ஒட்டி வைக்க வேண்டும்.முகாம்களில் பணியாற்றுவோருக்கு உணவு கிடைக்க முகாம் நுழைவு வாயில் அருகே ‘சிற்றுண்டி உணவகம்‘ ஏற்பாடு செய்ய வேண்டும். பணியாளர்களில் சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்திற்கு உள்ளாகிய வயது முதிர்ந்தவர்களும் இருப்பர். அவர்களின் நலன் கருதி அவர்களை உணவு இடைவேளைக்கு சரியான நேரத்தில் அனுப்ப வேண்டும். முகாம்களில் செல்போன் உபயோகிக்க கூடாது. கடந்த காலங்களில் விடைத்தாள்கட்டுகள் காணாமல் போன நிகழ்வு மற்றும் ரயிலிலிருந்து கீழே விழுந்த சம்பவத்தை தொடர்ந்து தேர்வுத்துறை விடைத்தாள் கட்டுகளை விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களில்ஒப்படைப்பதற்கு 4 சக்கர வாகனங்களை பயன்படுத்துகிறது. தீத்தடுப்பு சாதனங்கள், மணல் நிரம்பிய வாளிகள் தயார் நிலையில் வைக்கப்படவேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, விபத்தில் சிக்கி தேர்வு மையத்திற்கு தாமதமாக வருகை புரியும் தேர்வர்களை மனிதாபிமான அடிப்படையில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி