பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி 21ல் துவக்கம்: 66 மையங்களில் நடக்கிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 9, 2014

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி 21ல் துவக்கம்: 66 மையங்களில் நடக்கிறது.


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் 3ம் தேதி தொடங்கியது. வரும் 25ம் தேதி வரை நடக்கிறது. தமிழகம், புதுச்சேரியில் 5,600 பள்ளிகளை சேர்ந்த சுமார் 10 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வில் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில் பிளஸ் 2 விடைத்தாள்திருத்தும் பணி தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்துள்ளது. இதில் மாநிலம்முழுவதும் 66 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 21ம் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அன்று மொழிப்பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகளை முதன்மை தேர்வர்கள் தொடங்க உள்ளனர். முதன்மை தேர்வர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள் மார்ச் 21, 22ம் தேதிகளில் விடைத்தாள் திருத்தும் பணிகளை மேற்கொள்வர்.மார்ச் 24ம் தேதி முதல் துணை தேர்வர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளை தொடங்குவர். முதன்மை தேர்வர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள் இதர பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகளை மார்ச் 28, 29 தேதிகளில் மேற்கொள்வர். இதனையே துணை தேர்வர்கள் மார்ச் 31ம் தேதி தொடங்குவர். அந்த வகையில் விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 10ம் தேதிக்குள் நிறைவு பெறும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்னர் பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி