தேர்தல் எதிரொலி சிபிஎஸ்இ தேர்வு தேதி மாற்றம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 9, 2014

தேர்தல் எதிரொலி சிபிஎஸ்இ தேர்வு தேதி மாற்றம்.


பாராளுமன்ற தேர்தல் காரணமாக, சிபிஎஸ்இ பாடத் திட்டத்திற்கான 12ம் வகுப்பு தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 24ம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது.
இது 6ம் கட்ட தேர்தலில் அடங்கும்.இத்தேர்தல் காரணமாக அகில இந்திய அளவில் தற்போது நடத்தப்படும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு சில மாநிலங்களில் பாதிக்கப்படுகிறது.இதற்காக இந்த தேர்வு அட்டவணையில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது ஏப்ரல் 9, 10, 12, 17 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த சிபிஎஸ்இ பிளஸ்2 பொதுத்தேர்வுகள் முறையே ஏப்ரல் 25, 21, 19, 22 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி