"பங்களிப்பு பென்ஷன் திட்டத்திற்காக, ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த, ரூ.2 ஆயிரம் கோடி எங்கே போனதென,'' சிவகங்கையில் நடந்த உண்ணாவிரதத்தில்,
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, பொதுக்குழு உறுப்பினர் பிரடெரிக் எங்கல்ஸ் பேசினார். சிவகங்கையில், ஆசிரியர் உரிமைஇயக்கம் சார்பில், உண்ணாவிரதம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் இளங்கோ தலைமைவகித்தார். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் மாரிராஜன், முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக பொருளாளர் இளங்கோவன், உயர், மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக, மாநில பொது செயலாளர் சேதுசெல்வம், நகராட்சி தலைவர் அர்ச்சுனன் முன்னிலை வகித்தனர். * தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு உறுப்பினர்பிரடெரிக் எங்கல்ஸ் பேசுகையில், பங்களிப்பு பென்ஷனுக்காக, ரூ.2 ஆயிரம்கோடியை ஆசிரியர்களிடமிருந்து பிடித்தம் செய்துள்ளனர்.
இதற்கு தகவல் உரிமை சட்டத்தில் முறையான பதில் இல்லை. மாநில அரசு, ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த பணத்தை, மத்திய அரசுக்கு முறையாக செலுத்தவில்லை. புதியபென்ஷன் திட்டத்திற்கு பின், 200 ஆசிரியர்கள் இறந்தும்; 40 பேர்ஓய்வும் பெற்றுவிட்டனர். ஆனால், பண பலன் கிடைக்கவில்லை. கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்படும் என்றது. ஆனால், லோக்சபா தேர்தல் அறிக்கையில் கூட, இந்த அறிவிப்பு வெளியிடவில்லை. ஆசிரியர்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகின்றனர்.
இந்நிலை நீடித்தால் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்படும். பள்ளிகளில் ஆசிரியர்கள் தாக்குப்படுவதை தடுக்க, பாதுகாப்பு விதிமுறை கொண்டுவரவேண்டும். 2004 -06ம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களை, பணி வரன்முறை செய்யவேண்டும், என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி