பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் போராட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 15, 2014

பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் போராட்டம்.


கடந்த சட்ட பேரவைத் தேர்தலின் போதே புதிய பென்சன் திட்டம் ரத்து செய்யப்படும் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என்ற வாக்குறுதிகள் தரப்பட்டு தீர்க்கப்படாததால்,
பிளஸ் 2விடைத்தாள் திருத்தும் பணியினை கோரிக்கைகள் அடங்கிய அட்டை அணிந்து போராட்டமாக தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் நடத்தவிருப்பதாக சிவகங்கை மாவட்டச் செயலர் பொ. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்பட்டு தொடக்க நிலை ஊதியம் உயர்த்தப்படவேண்டும். 2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி நியமன நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும்நாள் முதல் இப்பணிகள் முடியும் வரை போராட்டம் நடைபெறுகிறது.மொழிப் பாடங்களின் மதிப்பீட்டுப் பணி மார்ச் 21 முதலும், மற்ற மொழிப் பாடங்களின் மதிப்பீட்டுப் பணி மார்ச் 28 முதலும் நடைபெறவுள்ளது. என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி