பிளஸ் 2 தேர்வில் மாற்றங்கள்: மாணவர்கள் குழப்பம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 5, 2014

பிளஸ் 2 தேர்வில் மாற்றங்கள்: மாணவர்கள் குழப்பம்.


பிளஸ் 2 தேர்வில் இந்த ஆண்டு கொண்டு வந்துள்ள மாற்றங்களால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு 3ம் தேதி தொடங்கியது. மொழிப்பாடத்துக்கு பிறகுநேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. இன்று மொழித்தாள் 2க்கான தேர்வு நடக்கிறது.ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 தேர்வு அட்டவணை தயாரிக்கும்போது ஒவ்வொரு பாடத் தேர்வுக்கு இடையே ஒரு நாள் அல்லது இரண்டு நாள் விடுமுறை வரும்படி தேர்வு அட்டவணை தயாரிப்பது வழக்கம். இதனால் மாணவர்கள் அடுத்த தேர்வுக்கான பாடங்களை ஒருமுறை திரும்ப பார்க்க நேரம் கிடைக்கிறது.இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு அட்டவணையில் ஆங்கில பாடத் தேர்வுக்கு இடையில் விடுமுறை இல்லை. இதனால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அதிருப்தியில் உள்ளனர். மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்காகவே தேர்வு அட்டவணை தயாரித்ததுபோல உள்ளது என்றும் கூறுகின்றனர்.அதாவது இன்று மொழித்தாள்(தமிழ்)2 நடக்கிறது அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் ஆங்கிலத் தேர்வுகள் நடக்கிறது. இதனால் அந்த பாடங்களை திரும்ப படிக்க முடியாத நிலை உள்ளது. இது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இது தவிர கணக்கு, இயற்பியல், வேதியியல், விலங்கியல், உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கான கேள்வித்தாள் எந்த அடிப்படையில் வரும் என்றும் தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். கடந்த ஆண்டுகளில் கேள்வித்தாள்கள் ‘ஏ’ மற்றும்‘பி’ என்ற பிரிவுகளில் வழங்கப்படும். முதலில் உட்காரும் மாணவருக்கு ‘ஏ’பிரிவு கேள்வித்தாளும், அடுத்து உட்காரும் மாணவருக்கு ‘பி’பிரிவு கேள்வித்தாளும் வழங்குவார்கள். அதனால் ஒருவரை ஒருவர் பார்த்து எழுத முடியாது.இந்த ஆண்டு அதேபோல கேள்வித்தாள் இடம் பெறுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.இதுபோல் இரு பிரிவுகளில் கேள்வித்தாள் வழங்கும் போது விடைத்தாளில்முதல் பக்கத்தில் இரண்டு கட்டங்கள் ஒதுக்கப்படும். அதில் அந்தந்த பிரிவு கேள்வித்தாளுக்கு விடை எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண்கள் பதிவு செய்யப்படும்.இந்த ஆண்டு விடைத்தாள் முதல் பக்கத்தில் அதற்கான இடம் ஒதுக்கப்படவில்லை.

அதனால் மாணவர்கள் எந்த அடிப் படையில் கேள்வித்தாள் வரும், அதை எப்படி எழுத வேண்டும் என்று புரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.இது தொடர்பாக தேர்வுத்துறை மூலம் எந்த தகவலும் தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு இதுவரை வரவில்லை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி