பிளஸ் 2 தேர்வு : கணக்கு, விலங்கியல் கேள்வித்தாள் குழப்பத்தால் சென்டம் குறையும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 15, 2014

பிளஸ் 2 தேர்வு : கணக்கு, விலங்கியல் கேள்வித்தாள் குழப்பத்தால் சென்டம் குறையும்


பிளஸ் 2 கணக்கு தேர்வில் 5க்கும் மேற்பட்ட கேள்விகள் குழப்பமாக இருந்ததால், மாணவர்கள் விடை எழுத திணறினர். அதிர்ச்சியில் பல கேள்விகளுக்கு விடை எழுதாமல் விட்டனர்.
இதனால் இந்த ஆண்டு கணக்கு பாடத்தில் சென்டம் குறையும். பிளஸ் 2 தேர்வு 3ம் தேதி தொடங்கி நேற்றுடன் 10 பாடங்களுக்கான தேர்வுகள் முடிந்துள்ளன.

7வது நாளான நேற்று கணக்கு, விலங்கியல் பாடங்களுக்கான தேர்வுகள்நடந்தன. கணக்கு பாடத்தேர்வில் வழங்கப்பட்ட கேள்வித்தாளில் பல இடங்களில் குழப்பங்கள் இருந்ததால் மாணவர்கள் விடை எழுத திணறினர். கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் இயற்பியல், கணக்கு, விலங்கியல் பாடத்தின் கேள்வித்தாள்கள் ஏ, பி என்ற பிரிவுகளில் வழங்கப்படாமல் அனைவருக்கும் ஒரே மாதிரியான கேள்வித்தாள்களே வழங்கப்பட்டன.நேற்று நடந்த கணக்கு பாடத் தேர்வின் கேள்வித்தாள் 22 பக்கங்கள் இருந்தன. ஒரு மதிப்பெண் கேள்வியில் இடம் பெற்ற கேள்விகள் அனைத்தும் புத்தகத்தில் இருக்கிறபடியே கேட்கப்பட்டாலும் 4 வது கேள்வியை மாற்றி கேட்டுள்ளனர். இதனால் மாணவர்கள் அந்த கேள்விக்கு விடை எழுதுவதில் குழம்பிப்போனார்கள். அடுத்ததாக 47வது கேள்வி, புத்தகத்தில் இருப்பது போல் கேட்கப்படவில்லை.

அதற்கு விடை எழுதினால் புத்தகத்தில் இருப்பது போல விடை வராது. அதே கேள்வியில் இடம் பெற்ற குறியீடுகளில் ‘எக்ஸ்’ மற்றும் ‘ஈ’ குறியீடுகள் மாறியுள்ளன. ‘ஈ’ என்ற குறியீடு கீழே இறக்கி அச்சிட்டு இருக்க வேண்டும். மேலே அச்சிட்டுள்ளனர். இதனால்விடை எப்படி எழுதுவது என்று புரியாமல் மாணவர்கள் குழம்பினர். 55வது கேள்வி பெரும்பாலும் வெளிப்படையாக கேட்கப்படும். ஆனால் இந்த முறை மூன்று மூன்று மதிப்பெண் வரும் வகையில் பிரித்து கேட்கப்பட்டுள்ளது . அதேபோல 55 பி கேள்வியும் இடம் பெற்றுள்ளது. கேள்வி எண் 70பி கட்டாய கேள்வியாக கேட்கப்பட்டுள்ளது. இதற்கு 10 மதிப்பெண்கள். இதை இரண்டு பிரிவுகளாக பிரித்துகேட்டுள்ளனர். கேள்வியே தவறு என்றும் மாணவர்கள் தெரிவித்தனர். இது தவிர கணக்கு கேள்வித்தாளில் பல இடங்களில் நிறுத்தல் குறிகள், கமா, புள்ளி, கேள்விக்குறி ஆகியவை தவறாகவே அச்சிட்டுள்ளனர்.இது போன்ற குழப்பங்கள் நிறைய கணக்கு கேள்வித்தாளில் இடம் பெற்றுள்ளன. இதனால் மாணவர்கள் விடை எழுதுவதில் குழப்பம் அடைந்தனர். பல மாணவர்கள் விடை எழுதாமலேயே வந்துவிட்டனர். இதன்படி பார்த்தால் 29 மதிப்பெண்கள் மாணவர்கள் இழக்க வேண்டியநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆசிரியர்களை பொறுத்தவரை கணக்கு கேள்வித்தாள் எளிதாக இருப்பதாக தெரிவித்தனர். இருப்பினும் சராசரி மாணவர்களால் அதிக மதிப்பெண்பெற முடியாது என்றும் தெரிவிக்கின்றனர்.இது தவிர விலங்கியல் கேள்வித்தாளும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக 1 மதிப்பெண் கேள்விகள் கடினமாகவே இருந்தன. 10 மதிப்பெண் கேள்விகளும் கடினமாக இருந்ததாக தெரிவித்தனர். ஆண்டுதோறும் விலங்கியல்பாடத்தில் சென்டம் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே இருக்கும். இந்நிலையில் இந்த ஆண்டும் ஒற்றை இலக்கத்தில் சென்டம் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

2 comments:

  1. aetho ella examilaum question sariya thayarichamathiri tet muthal tenth varai appadithan........!!!

    ReplyDelete
  2. The Maths trb coaching centre in Erode (MPC TRB Coaching Centre) who produced maths pg candidate in pg trb 2013 (My no is 13PG12030019 I have passed by studying here) will start their next year pg trb coaching tomorrow.Admission is going on... contact: 9042071667

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி