7–வது சம்பள கமிஷனின் யோசனைப்படி, அகவிலைப்படியில் 50 சதவீதத்தை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் இணைக்கவும் மந்திரிசபை ஒப்புதல் - தினந்தந்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 1, 2014

7–வது சம்பள கமிஷனின் யோசனைப்படி, அகவிலைப்படியில் 50 சதவீதத்தை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் இணைக்கவும் மந்திரிசபை ஒப்புதல் - தினந்தந்தி


மத்திய மந்திரிசபை கூட்டம் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்குவது என்று மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதனால் மத்திய அரசு ஊழியர்கள் பெறும் அகவிலைப்படி 90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்ந்துள்ளது.மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தும்.80 லட்சம் பேர்இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் ஆக மொத்தம் 80 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்.இந்த அகவிலைப்படி உயர்வு, கடந்த ஜனவரி 1–ந் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

7–வது சம்பள கமிஷனின் யோசனைப்படி, அகவிலைப்படியில் 50 சதவீதத்தை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் இணைக்கவும் மந்திரிசபை ஒப்புதல் அளித்து இருக்கிறது.

இதனால் மத்திய அரசு ஊழியர்களின் மொத்த சம்பளம் சுமார் 30 சதவீதம் உயரும்.கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தப்பட்டு 90 சதவீதம் ஆனது. அந்த உயர்வு முன்தேதியிட்டு 2013–ம் ஆண்டு ஜூலை 1–ந் தேதி முதல் அமலுக்கு வந்தது. இப்போது அகவிலைப்படி மீண்டும் உயர்த்தப்பட்டு 100சதவீதம் ஆகி இருக்கிறது.

3 comments:

  1. Welldone keep it up central govt....

    ReplyDelete
  2. State governnent servent ku eppo merge pannuvanga...

    Therinja reply pannunga

    ReplyDelete
  3. தமிழகத்தில் எப்ப சொல்லுவங்க?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி