தேர்தல் பணி: அரசு அதிகாரிகள் விடுப்பு எடுக்க கடும் கட்டுப்பாடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 13, 2014

தேர்தல் பணி: அரசு அதிகாரிகள் விடுப்பு எடுக்க கடும் கட்டுப்பாடு.


தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளதால், விடுமுறை எடுப்பதில் தமிழக அரசு அதிகாரிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவுறுத்தல்
கடிதத்தை அண்மையில் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் அனுப்பியுள்ளார்.அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், கூடுதல் ஆட்சியர்கள், சார் ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன் விவரம்:இந்தியா முழுவதும் ஒன்பது கட்டங்களாக தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 24 ஆம் தேதியன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தேர்தல் அலுவலர்களுக்கு பல்வேறு கட்டங்களாக பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.இந்த நிலையில், தேர்தல் சிறப்பான முறையில் நடைபெற தேர்தல் நடத்தும் அதிகாரிகளும், உதவி அதிகாரிகளும் மாவட்டத் தலைநகரங்களிலேயே இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தேர்தல் நடவடிக்கைகள் நிறைவடையும் வரையில் விடுப்பு ஏதும் எடுக்காமல் தொடர்ந்து பணிகளை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.தவிர்க்க முடியாத சூழ்நிலை என்றால், விடுப்பு எடுக்கலாம். ஆனால், அது குறித்த தகவலையும், உரிய கடிதத்தையும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி