அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கடும் அதிருப்தி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 11, 2014

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கடும் அதிருப்தி.


தமிழ்நாடு அரசு ஊழியர்கள் அரசின் மீது கடும் அதிருப்தியில் இருப்பது காவல்துறை ஆராயச்சி மேம்பாட்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது தமிழ்நாட்டில் இதுவரை நடந்த
போராட்டங்களில் 2720 போராட்டங்கள் அரசுக்கு எதிராக நடந்துள்ளது எனும் போது அவர்களின் அதிருப்தி வெளிப்பட்டுள்ளது உண்மை.

காரணம்....கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அப்போதைய தி.மு.க.அரசால் கண்டுகொள்ளப்படாத ஊதிய முரண்பாடு பிரச்சனைகள் புதிய ஓய்வூதிய திட்டம் பணி இட மாறுதலில் ஏற்பட்ட குளறுபடிகளை தான் ஆட்சிக்கு வந்தால் தீர்த்து வைக்கப்படும் என்று இன்றைய முதல்வர் தந்த வாக்குறுதிகள் அரசு ஊழியர்களுக்கு பெரும் ஆறுதலாக அமைந்தது ஆனால் இதுவரை ஊதியக்குழு முரண்பாடுகள் தீர்க்கப்படவில்லை.குறிப்பாக கடுமையாக ஊதியக்குழுவால் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பல கட்டப் போராட்டங்களை நடத்தியும் பலனில்லை என்பதால் அவர்கள் மாற்று சிந்தனையில் உள்ளதாக தெரியவருகிறது.மேலும் தன் பங்கேற்புத் திட்டத்தில் உள்ள எல்லாத் துறை ஊழியர்களும் மத்தியில் ஆட்சியில் இருந்த இரண்டு பெரிய கட்சிகளும் அத்திட்டத்தை ஆதரித்தபோது மாநில அரசு நினைத்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த முடியும் என்ற முறையில் இப்போதைய முதல்வர் தந்த உறுதியை ஏற்றனர் ஆனால் இதுவரை செயல்படுத்தாமல் இருப்பதும் அதிருப்திக்குக் காரணமாகியுள்ளது.

இப்பொழுது எல்லாம் எந்தக் கட்சிக்கு எத்தனை சதவீதம் வாக்கு வங்கி உள்ளது எனக் கணக்கிட்டு கூட்டணி சேரும் அரசியல் கட்சிகள் அவர்கள் கணக்குப்படியே 2%வாக்கு வங்கி உள்ள ஊழியர்களின் வாக்குகளைப்பெற போட்டிபோடும் எனத் தெரிகிறது.இப்போதுள்ள நிலையில் யார் ஊழியர்களுக்கு ஆதரவாக உள்ளார்களோ அவர்களுக்கே அவர்களின் ஆதரவு திரும்பும் என நம்பப்படுகிறது.இதற்கிடையே ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க நிதி இல்லை என்ற செய்தியும் அவர்களை அச்சமடையச் செய்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி