இந்திய விமானப்படைக்கு ஆள் சேர்ப்பு முகாம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 14, 2014

இந்திய விமானப்படைக்கு ஆள் சேர்ப்பு முகாம்.


இந்திய விமானப்படைக்கான ஆள்சேர்ப்பு முகாம் தாம்பரத்தில் வரும் 23-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுதொடர்பாக சென்னையில் உள்ள பாதுகாப்பு அமைச்சக பத்திரிகை தகவல் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:
விமானப்படை ஏர்மேன் (தொழில்நுட்பம் அல்லாதது) பணிக்கான ஆள்சேர்ப்பு முகாம் சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படை நிலைய ஏர்மேன் தேர்வு மையத்தில் வருகிற 23-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், கரூர், நாகப்பட்டினம், திருவாரூர்,தஞ்சாவூர், கோவை, நீலகிரி, சேலம், ராமநாதபுரம் மாவட்டங் களைச் சேர்ந்தோரும், அந்தமான் நிக்கோபார் தீவுகள், புதுச்சேரி, காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர்களும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம்.

விமானப்படையில் சேர பிளஸ்-2வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் 50சதவீத மதிப்பெண்கள் அவசியம். விண்ணப்பதாரர் 1.2.1994-ம் ஆண்டுக்கும் 31.5.1997 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். ஆள்சேர்ப்பு முகாம் தொடர் பாக ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால் தாம்பரம் விமானப்படை நிலைய ஏர்மேன் தேர்வு மையத்தை 044-22390561, 22396565 (எக்ஸ்டென்சன் 7833) ஆகிய தொலைபேசி எண்களிலோ அல்லது 94452-99128 என்ற செல்போன் எண்ணிலோ அலுவலக நாட்களில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை தொடர்புகொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி