தமிழக அரசுமீது கடும் அதிருப்தி தபால் ஓட்டு போடாமல் தேர்தலை புறக்கணிக்க ஆசிரியர்கள் திட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 17, 2014

தமிழக அரசுமீது கடும் அதிருப்தி தபால் ஓட்டு போடாமல் தேர்தலை புறக்கணிக்க ஆசிரியர்கள் திட்டம்.


7 அம்ச கோரிக்கைகளை நிறை வேற்றிட வலியுறுத்தில் உள்ளிருப்பு மற்றும் அடை யாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தியதால் தொடக்கப்பள்ளி ஆசிரியர் களின் ஒரு நாள் சம்பளத்தை பிடிக்க போட்டுள்ள உத்தர வைத் திரும்பப் பெற்று,
கோரிக்கைகளை நிறை வேற்றுவது குறித்து பேச்சு வார்த்தை நடத்தாவிட்டால் தபால் ஓட்டு போடாமல் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் திட்ட மிட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த மாதம் 25, 26 ஆகிய தேதி களில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் ஒரு இலட்சம் பேர், ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்தல், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணை யான ஊதியத்தை இடை நிலை ஆசிரியருக்கும் வழங்க வேண்டும், பங்களிப்பு ஓய் வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள் ளிட்ட 7 அம்ச கோரிக்கை களை நிறை வேற்றிட கோரி ஆசிரியர்கள் உள்ளிருப்பு வேலைநிறுத்த போராட் டம் மற்றும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத் தத்தில் ஈடுபட்டனர்.கடந்த 2 ஆண்டுகளாக இந்தக் கோரிக்கை நிறை வேற்றி தரக்கோரி தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இந்நிலையில் கடந்தமாதம் 25, 26 ஆகிய தேதி களில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துபோராட்டத்தில் ஈடுபட்ட னர்.இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அன்றைய தேதிகளில் தற்செயல் விடுப்பு கோரி விண்ணப்பித்திருந்தனர். தற்போது தமிழக அரசின் உத்தரவின் பேரில் பள்ளி கல்வித்துறை அன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்க ளுக்கு தற்செயல் விடுப்பை ரத்து செய்ததுடன் ஆசிரியர்களின் ஒரு நாள் சம் பளத்தை பிடித்துள்ளது. இதனால் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தமிழக அரசின் மீது அதிருப்தி அடைந்துள் ளனர்.

இது குறித்து தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கத்தின் மாநில நிர்வாகி ஒருவர்கூறு கையில், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கை நிறை வேற்றக்கோரி அமைதி யான முறையில் தான் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டோம். கடந்த 2 ஆண்டு களாக தமிழக அரசுக்கு பல் வேறு வழிகளில் எங்களது கோரிக்கைகளை எடுத்து கோரியும் அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் இது வரை எடுக்கப்படவில்லை.எனவேதான் இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டோம். அதற்கு தண்டனை வழங்குவது போல ஆசிரியர்களின் ஒரு நாள் சம் பளத்தை பிடித்துள்ளனர்.

இதனால் தமிழ்நாடு முழு வதும் உள்ள ஆசிரியர்கள் கடும்அதிருப்தியில் உள்ள னர். தற்போது தேர்தல் நடை பெறவுள்ள நிலையில் ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்துகின்றனர்.தமிழக அரசின் இந்த செயலால் ஆசிரியர் சங்கங்கள் ஒன்று கூடி தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தங்களது தபால் ஓட்டுக்களை போடாமல் தேர்தலை புறக்கணிப்பது என்று முடிவு செய் துள்ளனர் என்று ஆசிரியர் சங்கநிருவாகி கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி