மதுரை மாவட்டத்தில் 'சைல்ட் லைன்' அமைப்பின் போன் 1098 க்கு, தினமும் வரும் அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெரும்பாலும் ஆசிரியர்களைப் பற்றிய குற்றச்சாட்டுகள் அதிகம் தெரிவிக்கப்படுகின்றன.
குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, 'ஈவ் டீசிங்', பாலியல் கொடுமை, தகாத வார்த்தைகள் பேசுதல், புறக்கணித்தல் போன்ற பிரச்னைகள் இருந்தால், 1098 ஐ, இலவசமாக அழைக்கலாம். அதன் மூலம் தேவைப்படுபவர்களுக்கு, போன் மூலம் 'கவுன்சிலிங்' செய்யப்படும். மற்றபிரச்னைகளுக்கு நேரில் சென்று விசாரித்து, நடவடிக்கை எடுக்கப்படும். 'ஈவ் டீசிங்' பிரச்னைகளுக்கு அடுத்து, தற்போது ஆசிரியர்களைப் பற்றிய புகார்கள், இதில் அதிகம் வருகின்றன. தினமும் சராசரியாக வரும் அழைப்புகளில், பாதிக்கு மேல்,அரசு, தனியார் பள்ளிகள் என பாரபட்சமின்றி, ஆசிரியர்களைப் பற்றிய புகார்களாக உள்ளன.'தவறான வார்த்தைகளால் திட்டுகின்றனர். சக மாணவர்கள் முன் அவமானப்படுத்துகின்றனர். அடிக்கவும் செய்கின்றனர். பாடம் நடத்தாமல், வேலை வாங்குகின்றனர். நன்றாக படிக்கும் மாணவர்களிடம் மட்டும் அன்பாக நடக்கின்றனர்,' என்பது போன்ற குற்றச்சாட்டுகள், அதிகரித்துள்ளன.'சைல்ட் லைன்' இயக்குனர் பிரேமலதா கூறியதாவது: ஆசிரியர்களைப் பற்றிய புரிதல், மரியாதை இல்லை.
பாடம் கவனிக்காத போது, ஆசிரியர் திட்டினால் கூட, தாங்கிக் கொள்வதில்லை. ஆசிரியர்களுக்கு 'கவுன்சிலிங்' அளிக்கும் போது, 'மாணவனை திட்டினால், புகார் செய்கின்றனர். அல்லது வேறு விபரீத முயற்சி எடுப்பதால், சனி,ஞாயிறுகளில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. பாடம் நடத்த பயமாக இருக்கிறது' என்கின்றனர். இளைய சமுதாயம் குறித்து, கவலைப்படும் நிலையில் உள்ளோம். பெற்றோர்கள், ஆசிரியர்களின் மதிப்பை, வீட்டில் கற்றுத் தர வேண்டும். அப்போது தான், மாணவர்கள் பாதை மாறாமல், நல்வழியில் செல்வர், என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி