பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரி உண்ணாவிரதம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 2, 2014

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரி உண்ணாவிரதம்.


தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம் சார்பில், பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் பகுதி நேர சிறப்பாசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ள 16 ஆயிரத்து 549 பேரும் மாதம் ரூ.5 ஆயிரம் ஊதியத்தில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, கணினி, வாழ்க்கைக் கல்வி, தோட்டக்கலை, கட்டடக்கலை ஆகிய துறைகளில் கடந்த 3 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறோம்.

எங்களுக்கு ஜூன் முதல் ஏப்ரல் வரைதான் பணி வழங்கப்படுகிறது. இதனால்,மே மாதத்தில் ஊதியம் இன்றி தவிக்கிறோம். எனவே, எங்களை பிற ஆசிரியர்களைப் போல முறையான ஊதிய விகிதத்தில் பணி நிரந்தரம் செய்ய தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.சங்கத்தின் தென் மண்டல அமைப்புத் தலைவர் கே.ஜெயச்சந்திர பூபதி தலைமை வகித்தார்.மாவட்டத் தலைவர் முகமது இப்ராஹிம், செயலர் பிரபு, பொருளாளர் சுந்தர், துணைத் தலைவர் ராமசுப்பிரமணி, துணைச் செயலர் சக்திவேல், செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொருளாளர் சி.வள்ளிவேலு தொடங்கி வைத்தார். என்.நாகராஜன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.ராமசாமி முடித்து வைத்தார். எஸ்.பகவதி நன்றி கூறினார்.

கவனத்தை ஈர்க்க ஓவியம்:

போராட்டத்தின்போது தங்களது கோரிக்கைகள் குறித்து முதல்வர் கவனத்தில் எடுக்கக் கோரி, முதல்வர் ஜெயலலிதாவின் உருவத்தை பெரிய பேனரில் ஓவிய ஆசிரியர்கள் வரைந்ததை பொதுமக்கள் வியப்போடு பார்த்துச் சென்றனர்.

3 comments:

  1. பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரி உண்ணாவிரதம்.------------

    தலைவர் கே.ஜெயச்சந்திர பூபதி

    mikka nadri muyarchi vetri adaya valthukkal

    Nangal edho oru manila manadu varum 16 Thiruvanna malail endru kelvipattoum
    ondru inaivom vetriperuvom

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Dear All Part time Teachers
    Pl visit the page and conduct our heads
    tnparttimeteachers.hpage.com

    பி.இராமர் பி.கோவிந்தராஜூ
    (மாநில தலைவர்) (மாநில பொதுச்செயலாளர்)
    9943259517 9003469679


    தமிகமுதல்வர் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு நன்றி தெரிவித்து முதல் மாநில மாநாடு தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம்

    ondrinaivom vetriperuvom

    பி.இராமர் பி.கோவிந்தராஜூ
    (மாநில தலைவர்) (மாநில பொதுச்செயலாளர்)
    9943259517 9003469679

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி