வங்கி நடைமுறைகள் எப்படி? சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 16, 2014

வங்கி நடைமுறைகள் எப்படி? சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம்.


தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவ மாணவியர் வங்கி நடைமுறைகள் பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ளும் வாய்ப்பினை பெற்றனர்.
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவ மாணவியர்க்கு வங்கி தொடர்பான நடைமுறைகள் அறிந்து கொள்ள தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் ஏற்பாடு செய்தார்.

தேவகோட்டை பாரத் ஸ்டேட் வங்கி கிளை முதன்மை மேலாளர் இன்பசேகரன் சம்மதம் தெரிவித்தார்.மாணவர்கள் பள்ளியிலிருந்து வங்கிக்கு சுற்றுலாவிற்கு பயணிப்பது போல் உற்சாகத்துடன் அனைவரும் சென்றனர்.பாரத ஸ்டேட் வங்கி வணிக பிரிவு மேலாளர் சேர்மகனி அனைவரையும் வரவேற்றார்.வங்கி உதவியாளர் முருகன் மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார்.வங்கியின் செயல்பாடுகள் என்ன, என்ன என்பது குறித்து விளக்கப்பட்டது. வங்கியில் பொதுமக்கள் பயன்பாடும்,பொதுமக்களுக்கு வங்கியின் சேவை குறித்தும் எடுத்து கூறினார்.வங்கியில் அமைந்து உள்ள ஒவ்வொரு பிரிவையும் தனித்தனியே மாணவர்களை அழைத்து சென்று விளக்கம் அளித்தார்.பணம் செலுத்தும் படிவம்,பணம் எடுக்கும் படிவம்,காசோலை எடுக்கும் படிவம்,நகை கடன் செலுத்துவது எப்படி? செலுத்திய பணத்தை எடுப்பது எப்படி? ஏ டி எம் இயந்திரத்தினை பயன்படுத்துவது எப்படி? என்பதை செய்து காண்பித்து விளக்கமாக எடுத்து கூறினார்.பணம் செலுத்தும் கவுன்ட்டர் ,உதவியின்றி ஏ டி எம் அறையிலியே 24 மணி நேரமும் நம் கணக்கில் பணம் செலுத்துவது எப்படி என்றும் செய்து காண்பித்தார்.

வங்கியில் கல்விக்கடன்,விவசாய கடன் ,தனிநபர் கடன்,வியாபாரகடன்,ஆடம்பர பொருள்களுக்கு வாங்க வழங்கும் கடன் மற்றும் நகை கடன் இவைகளை எவ்வாறு பெறுவது என்பதையும், அதற்கு நாம் தயார்செய்து கொடுக்க வேண்டிய ஆவணங்கள் குறித்தும் விளக்கம் அளித்தார்.பணம் செலுத்தும்போதும்,எடுக்கும்போதும் பாஸ் புக்கை பயன்படுத்துவது எப்படி என்றும் எடுத்து கூறினார்.பணம் என்னும் மெசினை காண்பித்து அதனில் எவ்வாறு பணம் எண்ணுகிறார்கள் என்பதயும் செய்து காண்பித்தார்கள்.

மாணவி அபிநயா,தேன்மொழி,ஷன்முகப்ரகாஷ் ஆகியோர் படிவங்கள் பூர்த்தி செய்வது தொடர்பாக கேள்விகள் கேட்டு பதில் பெற்றனர்.சில மணி நேரங்கள் மாணவ,மாணவியர் உற்சாக வெள்ளத்தில் திளைத்தனர்.மாணவர்களை அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை ஆசிரியை செல்வமீனாள்,வாசுகி மற்றும் ஆசிரியர் ஸ்ரீதர் ஆகியோர் செய்திருந்தார்கள்.நிறைவாக பள்ளியின் சார்பாக மாணவி திவ்யா நன்றி கூறினார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி