தமிழக அரசு பணிகளில் இருந்து ஓய்வுபெற்ற மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தற்போது வழங்கப்படும் அகவிலைப்படி 90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:
மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1.1.2014 முதல் அகவிலைப்படியை 90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தி வழங்க முடிவு செய்துள்ளது.அதன்படி மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு உயர்த்தப்பட்ட வீதத்திலான அகவிலைப்படி 1.1.2014 முதல் ரொக்கமாக வழங்கப்படும்.திருத்தப்பட்ட அகவிலைப்படியை கணக்கிடுகையில் ஒரு ரூபாய்க்கு குறைவாக வரக்கூடிய தொகை அது 50 காசும் அதற்கு மேலும் இருக்குமாயின் அது அடுத்த ஒரு ரூபாயாக கணக்கிடப்பட வேண்டும். அதுவே 50 காசுக்கு குறைவாக இருந்தால் அது விட்டுவிடப்பட வேண்டும். ஒவ்வொரு தனி நபருக்கும்கொடுக்கப்பட வேண்டிய அகவிலைப்படியை கணக்கிடுவது பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகளின் பொறுப்பாகும். இந்த ஆணை கீழ்க்கண்ட ஓய்வூதியதாரர்களுக்கு பொருந்தும்.ர் அரசு ஓய்வூதியதாரர்கள், அரசு உதவி பெறும் மற்றும் உள்ளாட்சி மன்ற கல்வி நிறுவனங்களின் ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி மன்றங்களின் ஏனைய ஓய்வூதியதாரர்கள்.
*பொதுத்துறை நிறுவனம், தன்னாட்சி நிறுவனம், உள்ளாட்சி அமைப்பு, கூட்டுறவு நிறுவனம் முதலியவற்றில் ஒட்டு மொத்த தொகை பெற்ற ஓய்வூதியத்தை தொகுத்து பெறும் தொகையில் மூன்றில் ஒரு பங்கு தொகையை திரும்ப பெறும் தகுதியுள்ள, திருத்தியமைக்கப்பட்ட வீதத்தில் திரும்பப்பெறும் தொகை பெற தகுதியுள்ள மாநில அரசு பணியாளர்கள்.
*1.11.1956ம் நாளன்று, தமிழ்நாடு மாநிலத்திற்கு மாற்றப்பட்டபகுதிகளில் அதாவது கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ள கருவூலங்களில் அதே நாளில் ஓய்வூதியம் பெறுகின்ற முந்தைய திருவாங்கூர் - கொச்சி மாநில ஓய்வூதியதாரர்கள்.
*தமழ்நாடு சிறப்பு ஓய்வூதிய விதிகளின் கீழ் சிறப்பு ஓய்வூதியம் மற்றும்கருணைப்படி பெறும் ஓய்வூதியதாரர்கள்.கருணைத் தொகை பெறும் மாநில அரசு மற்றும் முன்னாள் மாவட்ட வாரியத்தின் வருங்கால வைப்புநிதிக்கு தொகை செலுத்திய , ஓய்வூதியம் இல்லாத பணியாளரமைப்பைச் சேர்ந்த பயனாளிகளான இறந்துவிட்ட பணியாளர்களின் மனைவியர்மற்றும் குழந்தைகளுக்கும் அகவிலைப்படி அளிப்பது குறித்த ஆணைகள் தனியாக வெளியிடப்படும். இந்த ஆணையில் அகவிலைப்படி அனுமதித்ததன் காரணமாக அதிகரித்து விட்ட செலவினம், 1956 ம் ஆண்டு மாநில மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட விதிமுறைகளுக்கிணங்க, அடுத்து வரும் மாநிலங்களுக்கிடையே பிரித்துக் கொள்ளத் தக்கதாகும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி