தேர்தலில் வாக்களிக்க புகைப்படத்துடன் கூடிய 11 ஆவணங்கள் பயன்படுத்தலாம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 11, 2014

தேர்தலில் வாக்களிக்க புகைப்படத்துடன் கூடிய 11 ஆவணங்கள் பயன்படுத்தலாம்.


தேர்தலில் வாக்களிக்க புகைப்படத்துடன் கூடிய 11 ஆவணங்களை பயன்படுத்தலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தலில் ஓட்டு போடுவதற்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால்,நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஓட்டு போடும் வாக்காளர்கள், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை தவிர புகைப்படத்துடன் கூடிய 11 ஆவணங்கள் பயன்படுத்தலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அதன் விவரம் வருமாறு: பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், மத்திய-மாநில பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு அளிக்கப்பட்ட அடையாள அட்டை,புகைப்படத்துடன் கூடிய பாஸ்புக், பான் கார்டு, ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு, வேலை உறுதி திட்ட அடையாள அட்டை, தொழிலாளர் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட காப்பீட்டு அட்டை, புகைப்படத்துடன் கூடிய பென்ஷன் ஆவணங்கள்,வாக்காளர் பூத் சிலிப் என 11 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி