தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன்குமார் கூறியதாவது: தேர்தல் பணியில் ஈடுபடுவோர் மற்றும் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு செல்லும்,
போலீசாரும், தபால் ஓட்டு போடலாம். அவர்களுக்கான தபால் ஓட்டு, எஸ்.பி., மூலமாக, வினியோகம் செய்யப்படும். தேர்தலுக்கு, ஒரு வாரத்திற்கு முன்பாக, போலீசாருக்கு பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்க, சிறப்பு முகாம் நடத்தப்படும். இம்முகாமில், ஓட்டுச் சீட்டு வழங்கப்படும். அங்கே ஓட்டுப் பெட்டி வைக்கப்படும். விருப்பம் உள்ளவர்கள், அங்கேயே ஓட்டு போட்டு, பெட்டியில் போடலாம். அன்று ஓட்டு போட முடியாதவர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலக அறை முன் வைக்கப்பட்டிருக்கும்ஓட்டுப் பெட்டியில், மே 15ம் தேதி மாலை வரை, ஓட்டு போடலாம். தபால் ஓட்டு போடும் அனைவரும், மே 15ம் தேதி வரை, ஓட்டு போடலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி