பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்தவர்களில் 99 சதவீதத்தினர் தனியார் பள்ளியில் பயின்றவர்கள்.
அவர்களின் பெரும்பாலானோரின் பெற்றோர், அரசு பள்ளி ஆசிரியர்கள்!சமீபத்தில் இப்படி ஒரு விமர்சனத்தை எதிர்கொண்டேன். 'அரசுப் பள்ளிகளின் மீது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கே நம்பிக்கையில்லை!" என்பதே அந்த விமர்சனத்தின் சாரம்.அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீதான இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இன்று நேற்றல்ல, காலம் காலமாய் நிகழ்ந்து வருவது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர் என்பதே மக்களின் பொதுவான குற்றச்சாட்டு.அரசாங்க மருத்துவர்கள் தங்கள் குழந்தைகளை மேலான சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் அனுமதிப்பதில்லையா?
அதனால் அவர்களுக்கு அரசு மருத்துவர்களின்மீதும், அவர்களின் திறமையின் மீதும் நம்பிக்கையில்லை என்று அர்த்தமா? அரசாங்க மருத்துவமனைகளில் தகுந்த வசதிகள் இல்லாதபோது தனியார் மருத்துவமனையை நாடுவதில் தவறென்ன இருக்க முடியும்?அல்லது, அரசு பணிகளில் அமர்ந்திருக்கும் பல லட்சம் மக்கள் தங்கள் பல்வேறு தேவைகளுக்காக தனியார் அமைப்புக்களை நாடுவதில்லையா? அதுபோலவே, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளை நாடுவதும்!ஒரு நாளில் குறைந்தபட்சம் அரைமணி நேரம் பயணிக்கக் கூடிய பேருந்துகளில்கூட வீடியோ , ஆடியோ குளிர்சாதன வசதி என்று ஆயிரம் வசதிகளை எதிர்ப்பார்க்கும் மக்கள், அரசு பேருந்துகள் காலியாகவே இருந்தாலும் அதை தவிர்த்து தனியார் பேருந்துகளில் முண்டியடித்து பயணிப்பதில்லையா? அதற்காக, நாம் மக்களை குறை கூறுகிறோமா? அரைமணி நேர பயணத்திற்கே ஆயிரம் வசதிகள் எதிர்ப்பார்க்கும் நாம், தங்கள் குழந்தைகள் ஆண்டுமுழுவதும் பயிலக்கூடிய பள்ளிகள் அடிப்படை கட்டமைப்புகளுடனும் மேலான வசதிகளுடனும் இருக்கவேண்டும் என்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களின் எதிர்பார்ப்பை மட்டும் ஏன் குறை கூற முற்படுகிறோம்?
நம் குழந்தைகள் வீட்டில் அனுபவிக்கும் வசதிகளை பள்ளியிலும் அனுபவிக்க வேண்டும்;சுத்தமான குடிநீரும் கழிப்பறை வசதிகளும் கொண்ட தூய்மையான ஆரோக்கியமான சூழலில் தங்கள் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என்பது எல்லா விதமான பெற்றோரின் எதிர்ப்பார்ப்பும் தானே? இதில் அரசுப் பள்ளி ஆசிரியர், மற்ற பெற்றோர் என்ற பாகுபாடு ஏன்?அரசுப் பள்ளிகளில் தரமான கற்பித்தல் நடைபெறுவதில்லை என்பதும், தனியார் பள்ளிகளில் நல்ல தேர்ச்சி வருகின்றது என்பதும் ஒரு மாயை. ஒரு வீட்டில் இருக்கும் இரு குழந்தைகளில் ஒரு குழந்தை நன்றாக உணவு உட்கொள்பவனாகவும், அடுத்த குழந்தை சாப்பிடவே மறுப்பவனாகவும் இருக்கின்றனர். இரண்டு குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி உணவுதான்; ஒரே மாதிரி சுவைதான்; ஆனால், ஒரு குழந்தை மட்டும் சாப்பிட மறுக்கும்போது, அதற்காக நாம் அந்தத் தாயின் சமையலை குறை கூறவியலுமா?தனியார் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் அந்த முதல் குழந்தையை போல. அவர்களை யார்வேண்டுமானாலும் பயிற்றுவிக்க முடியும்? ஆனால், அரசு பள்ளிகளில் பயிலும்குழந்தைகள் இரண்டாவது குழந்தையைப் போல. இவர்களை பயிற்றுவிப்பவர்கள்தான் திறமைசாலிகள்.
அந்த வகையில் பார்த்தால் கிராமப்புறப் பின்புலத்தில் இருந்து எந்தவித அடிப்படை வசதிகளும் பெற்றோரின் வழிக் காட்டுதலும் இன்றி இரண்டாவது பிள்ளையைப் போல ஆர்வமின்றி படிக்க வரும் ஏழைக் குழந்தைகளை சிரமப்பட்டு படிக்கவைத்து தேர்ச்சி பெற அயராது உழைப்பவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்களே!தேர்வு முடிவுகள் வந்த சில நாட்களுக்கு மட்டுமே அரசு பள்ளிகள் மீது தங்கள் பார்வையை வீசும் ஊடகமும், கருத்தாளர்களும் சாதாரண நாட்களில் பள்ளியை எட்டிப் பார்ப்பது உண்டா?காலையில் பள்ளி நுழைவு வாயிலிலேயே சிகரெட் துண்டுகளை கடந்து, வகுப்பறையின் எதிரில் அவசர கோலத்தில் வீசப்பட்டு கிடக்கும் கால்சட்டைகளையும், கேட்பாரற்று கிடக்கும் மலிவு விலை கால்கொலுசையும், கழுத்து சங்கிலியையும், அவற்றை புரிந்தும் புரியாமலும் பார்க்கும் பிள்ளைகளையும் கடந்து வகுப்பறைக்குள் நுழைநதால், ஜன்னல் வழியே வீசப்பட்டு நொறுங்கிக் கிடக்கும் மதுபாட்டில்களின் சிதறல்களை சுத்தம் செய்வது யார் என்ற பட்டிமன்றதிலுமே மூன்றாம் பாடவேளை வரை கடந்துவிடுகிறதே அதையாவது அறிந்ததுண்டா?வகுப்பறையில் மொபைல் பயன்படுத்துவது தவறு என்பதற்காக பாடம் நடத்திக் கொண்டிருக்கையில், அதனை கவனிக்காமல் மாணவன் பார்த்துக்கொண்டிருந்த அலைபேசியை வாங்கி அதிர்ச்சியிலும் அருவெறுப்பிலும் உறைந்து போகும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், தொடர்ந்து அவ்வகுப்பில் பாடம் கற்பிக்க இயலாமல் தடுமாறிக்கொண்டிருக்கின்றனரே... அவர்களின் நிலையையாவது இவர்கள் அறிவாரா?பிள்ளைகளை கடிந்து ஒரு வார்த்தை பேசக்கூடாது, தண்டிக்கக் கூடாது, மீறினால் சிறைவாசம் என்று ஆசிரியர்களுக்கு ஆயிரம் கட்டுப்பாடுகளை விதிக்கும் அரசு மாணவர்களுக்கு அளித்திருக்கும் கட்டுப்பாடில்லா சுதந்திரம் அவர்களை தறிக்கெட்டுஅலையவிட்டு இருப்பதையாவது அறிவார்களா?கண்ட இடங்களில் எச்சில் துப்புவது, பள்ளியிலேயே - அடித்துவிட்டு ஆசிரியர் மீதேஇடிப்பது, செவிகளை பொத்திக்கொள்ளும் அளவுக்கு அருவெறுக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்துவது என்று சமுதாயத்தின் அத்தனை அவலங்களையும் ஒருங்கே கொண்டதாய் பெரும்பாலான அரசுப் பள்ளிகள் திகழும்போது, தினம் தினம் அவற்றிலேயே உழலும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எப்படி தங்கள் பிள்ளைகளை அப்பள்ளிகளில் சேர்ப்பர்?அரசு கொடுக்கும் இலவசங்களை பெற மட்டும் பள்ளிகளுக்கு அவசரமாய் வருகைத் தரும் பெற்றோர்கள் இவற்றை கட்டுப்படுத்த ஏன் முயல்வதில்லை? பெற்றோர் - ஆசிரியர் கூட்டத்திற்கு எத்தனை பெற்றோர் தவறாமல் வருகைபுரிகின்றனர்?இப்படிக் கட்டமைப்பு வசதியிலும் ஒழுக்கத்திலும் மோசமாகவே பெரும்பாலான அரசுப் பள்ளிகள் இருக்கும் சூழலில், எந்த அரசுப் பள்ளி ஆசிரியப் பெற்றோர் மனமுவந்து அரசுப் பள்ளிகளை நாடுவர்?பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவர்களின் மனனம் செய்யும் திறன் மட்டுமே வளர்க்கப்படுகிறது. மாணவர்கள் அறிவுச்சிறை (intellectual imprisonment)-க்குள் தள்ளப்படுகின்றனர். அரசுப் பள்ளிகளில் மட்டுமே மாணவர்களின் இயல்பான முழு ஆளுமைத்திறன் வளர்ச்சி சாத்தியப்படுகிறது. பகல் கொள்ளையர்களாய் தனியார் பள்ளிகளின் கல்வித் தந்தையர் செயல்படுகின்றனர் என்பதை எல்லாம் அறிந்தும், வேறு வழியின்றியே தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.
அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் அரசு தேர்வாணையம் மூலமாகவோஅல்லது ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி வென்றவர்களாகவோ மட்டுமே இருகின்றனர். அவர்களிடம் திறமைக்கும் அறிவுக்கும் அனுபவத்திற்கும் குறைவில்லை. ஆகவே, அரசுப் பள்ளிகளின் மீது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கே நம்பிக்கையில்லை என்று இனியும் பொதுவாய் கூறுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்குத் தன்னால் ஆன பங்களிப்பை அளிக்க முயற்சிக்க வேண்டும்.
Article by Mrs.- டாரத்தி
Tea kadai :
ReplyDeleteCustomer : owner engappa
Labour : nalla kadaiyil tea kudikka poirukar
Idha madhiri iruku madam (darathy) unga article
At least tea glassa kaluvitu tea kudukka sollunga
Matha naall adikira kootha Vida inspection andru nadakra koothu
Vidunga Sir ..
மிக நன்றாக கூறினீர்கள் டாரத்தி அவர்களே வாழ்த்துக்கள்
Deleteஇது முழுக்க முழுக்க உண்மை ஆனால் இதில் ஒரு சில தகவல்கள் விடுபட்டுவிட்டன...அரசு பள்ளி ஆசிரியர்கள் பலர் பாடம் நடத்த முடியாத சூழலுக்கு காரணம்
Deleteஏகப்பட்ட பேப்பர் ஆதாரதிற்க்காக தேவைப்படும் தகவல்களுக்காக விவரங்களை சேகரிக்கவே அதிக நேரம் ஆகிறது....
இதில் பணியிடை பயிற்சி.....cce பயிற்சி....
ஜாதி சான்றிதழ் பணி அதிலும் இது முக்கியமானது...இதற்காக ஒரு ஆசிரியரை ஒதுக்கி அவர் தாசில்தார் அலுவலகம்...வருவாய்த்துறை அலுவலகம் என்று போகவே அதிக நாட்கள் ஆகிறது..இப்படியே மற்றவர் பணிகளையும் ஆசிரியர்கள் தலையில் கட்டிவிடுகிறார்கள்...இதே முறையில் தான் வேலைவாய்ப்பு அலுவலக பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்....இது தான் நிலை...
அடுத்து புத்தங்கங்களை சுமந்து வரும் கூலிக்காரராகவும் வேலை பார்க்கவேண்டும்...
டாஸ்மார்க்கிர்க்கு பொருகளை அனுப்பும் போது பள்ளிகளுக்கு மட்டும் ஏன் பொருட்களை அனுப்பாமல் இப்படி மாணவர்களின் நலனில் விளையாடுகிறார்கள்....
இதுமட்டுமில்லாமல் செருப்பு எடுத்துவருவது இதர இலவச பொருட்கள் நோட்டு புத்தகங்கள் வாங்குவது என்றே பலநாட்கள் சென்று விடுகின்றன...இத்துடன் இலவச லேப்டாப்...சைக்கிள் இவற்றை விநியோகிப்பது...இதைவிட கொடுமை அதற்க்கான விவரங்களை அரசுக்கு அனுப்புவது இதிலும் ஜாதிவாரியாக அவற்றை தனித்தனியாக குறிப்பெடுத்து அனுப்பவேண்டும்....இதற்கே பலநாட்கள் ஆகிறது...
இது மட்டுமில்லாமல் மக்கள்தொகை கணக்கெடுப்பு ...வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி...இலவச பேருந்து அட்டைக்கான பணி....
சரிப்பா இதெல்லாம் விடுங்க அணைத்து மாணவர்களையும் அன்பாக நடத்தவேண்டும்...அவர்களை கண்டிக்ககூடாது...அடுத்து தண்டிக்க கூடாது...ஆனால் அவர்களின் பிரச்சினைகளுக்கு மட்டும் பொறுப்பேற்க வேண்டும்...அவர்கள் படித்தார்களா என்று கண்டிக்க கூடாது ஆனால் படிக்காதவர்களே இல்லை என்று தகவல் தரவேண்டும்...
முக்கியமாக இங்கு ஆசிரியர்களுக்கே கழிப்பிட வசதி இல்லை ..அப்படியிருக்க மாணவர்களுக்கு எங்கே...அப்படியே கட்டினாளுக் ஒரு சில மாணவர்கள் அதை உடைத்து சேதபடுத்தி அணைத்து மாணவர்களுக்கும் சங்கடத்தையும் ஏற்படுத்துகிறார்கள்...அதை பராமரிக்க ஆட்களும் இங்கே கிடையாது...
இப்படி ஆசிரியர்களே பலநாட்கள் இல்லாமல் மீட்டிங் மீட்டிங் என்று சென்று கொண்டிருக்கும் நிலையில் அரசு பள்ளிகளை நம்பி எப்படி மாணவர்களை சேர்ப்பது...ஆசிரியர்கள் பள்ளியில் பாடம் நடத்து நாட்கள் உண்மையில் இங்கே மிக குறைவே...இதை அறிந்தவர்கள் எப்படி இங்கே தங்கள் பிள்ளைகளை சேர்ப்பார்கள்...
அப்படியே இருந்தாளும் இங்கே அனைவரும் பாஸ் ..மாணவனுக்கு படிக்கதேரிந்தாலும் சரி தெரியாவிட்டாலும் சரி அவன் பாஸ்...என்ன ஒரு புத்திசாலித்தனம்...
இந்த நிலையெல்லாம் மாறினால் உறுதியாக அரசு பள்ளிகள் சிறப்பாக செயல்படும்....பழைய தேர்ச்சி முறையே சிறந்தது ஒன்றும் தெரியாமல் பாஸ் என்று ஜம்பம் அடித்து கொள்வதில் என்ன பலன் பிரோஜனம் உள்ளது ....
*************முக்கியமாக கடைசியாக் ஒரு கேள்வி மாணவர்கள் பாதிக்கபடகூடாது என்று வாய்கிழிய பேசி அனைவரும் பாஸ் என்ற முறையை கொண்டுவந்தவர்களும்....ஆங்கில கல்வி வேண்டாம் தமிழ் மொழியை ஒழிக்கிறார்கள் என்று கூப்பாடு போடும் அரசியல் வாதிகள் யாரவது இந்த முறை பின்பற்றப்படும் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை படிக்கவைகிரார்களா...????????????????
இனியாவது கல்வி முறைபற்றி இவர்கள் வாய்கிழிய பேசும்போது அவர்கள் பிள்ளைகளை எங்கு படிக்கவைகிரார்கள் என்ற கேள்விகளை கேட்க மறக்காதீர்கள்.....
What is your point? You cannot defend this stand I hope
ReplyDeletevery good super article..govt school la sertha mataengiranga enpathu kurai,BUT EAEN sertha mataengiranga?arumaiya sonnenga..gover ment than cm,entha cm govt hospitalla treatment edukaranga?appolla hospital than poranga..namil ethanai per govt bus la pogirom?rasation rice vangurom?ration minister vangurara first?
ReplyDeleteTARATHI VALTHUKAL..
ReplyDeleteGOVERMENT TA KURAISOLLA MUDIYATHU AANATTHU deptment pakanum but athae pol teachers saiyum kuraisoola kudathu,avargal ethirpakum vasathi engu ulladho aangu avargal pilagalai padika vaipathu thavariilai..enga parents roomla fan mattum than iruku,but my roomla AC iruku..athu than parents..nam kastapatalum nam pilaigal nalla irukanum nu nenapanga?ethana govt scoola oru fan olungana path room iruku?or iruka vidurangala?
ReplyDeleteThis is real fact
ReplyDeleteVery nice Article
ReplyDeleteஅருமை தோழி நல்ல கட்டுரை.
ReplyDeleteThannidam irukkum kuraiyai sariseyyamal prarai patriyea kutram sollum birpokku mana noyalikalukku sariyana savukkadi katturai....!
ReplyDeleteஇது முழுக்க முழுக்க உண்மை ஆனால் இதில் ஒரு சில தகவல்கள் விடுபட்டுவிட்டன...அரசு பள்ளி ஆசிரியர்கள் பலர் பாடம் நடத்த முடியாத சூழலுக்கு காரணம்
ReplyDeleteஏகப்பட்ட பேப்பர் ஆதாரதிற்க்காக தேவைப்படும் தகவல்களுக்காக விவரங்களை சேகரிக்கவே அதிக நேரம் ஆகிறது....
இதில் பணியிடை பயிற்சி.....cce பயிற்சி....
ஜாதி சான்றிதழ் பணி அதிலும் இது முக்கியமானது...இதற்காக ஒரு ஆசிரியரை ஒதுக்கி அவர் தாசில்தார் அலுவலகம்...வருவாய்த்துறை அலுவலகம் என்று போகவே அதிக நாட்கள் ஆகிறது..இப்படியே மற்றவர் பணிகளையும் ஆசிரியர்கள் தலையில் கட்டிவிடுகிறார்கள்...இதே முறையில் தான் வேலைவாய்ப்பு அலுவலக பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்....இது தான் நிலை...
அடுத்து புத்தங்கங்களை சுமந்து வரும் கூலிக்காரராகவும் வேலை பார்க்கவேண்டும்...
டாஸ்மார்க்கிர்க்கு பொருகளை அனுப்பும் போது பள்ளிகளுக்கு மட்டும் ஏன் பொருட்களை அனுப்பாமல் இப்படி மாணவர்களின் நலனில் விளையாடுகிறார்கள்....
இதுமட்டுமில்லாமல் செருப்பு எடுத்துவருவது இதர இலவச பொருட்கள் நோட்டு புத்தகங்கள் வாங்குவது என்றே பலநாட்கள் சென்று விடுகின்றன...இத்துடன் இலவச லேப்டாப்...சைக்கிள் இவற்றை விநியோகிப்பது...இதைவிட கொடுமை அதற்க்கான விவரங்களை அரசுக்கு அனுப்புவது இதிலும் ஜாதிவாரியாக அவற்றை தனித்தனியாக குறிப்பெடுத்து அனுப்பவேண்டும்....இதற்கே பலநாட்கள் ஆகிறது...
இது மட்டுமில்லாமல் மக்கள்தொகை கணக்கெடுப்பு ...வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி...இலவச பேருந்து அட்டைக்கான பணி....
சரிப்பா இதெல்லாம் விடுங்க அணைத்து மாணவர்களையும் அன்பாக நடத்தவேண்டும்...அவர்களை கண்டிக்ககூடாது...அடுத்து தண்டிக்க கூடாது...ஆனால் அவர்களின் பிரச்சினைகளுக்கு மட்டும் பொறுப்பேற்க வேண்டும்...அவர்கள் படித்தார்களா என்று கண்டிக்க கூடாது ஆனால் படிக்காதவர்களே இல்லை என்று தகவல் தரவேண்டும்...
முக்கியமாக இங்கு ஆசிரியர்களுக்கே கழிப்பிட வசதி இல்லை ..அப்படியிருக்க மாணவர்களுக்கு எங்கே...அப்படியே கட்டினாளுக் ஒரு சில மாணவர்கள் அதை உடைத்து சேதபடுத்தி அணைத்து மாணவர்களுக்கும் சங்கடத்தையும் ஏற்படுத்துகிறார்கள்...அதை பராமரிக்க ஆட்களும் இங்கே கிடையாது...
இப்படி ஆசிரியர்களே பலநாட்கள் இல்லாமல் மீட்டிங் மீட்டிங் என்று சென்று கொண்டிருக்கும் நிலையில் அரசு பள்ளிகளை நம்பி எப்படி மாணவர்களை சேர்ப்பது...ஆசிரியர்கள் பள்ளியில் பாடம் நடத்து நாட்கள் உண்மையில் இங்கே மிக குறைவே...இதை அறிந்தவர்கள் எப்படி இங்கே தங்கள் பிள்ளைகளை சேர்ப்பார்கள்...
அப்படியே இருந்தாளும் இங்கே அனைவரும் பாஸ் ..மாணவனுக்கு படிக்கதேரிந்தாலும் சரி தெரியாவிட்டாலும் சரி அவன் பாஸ்...என்ன ஒரு புத்திசாலித்தனம்...
இந்த நிலையெல்லாம் மாறினால் உறுதியாக அரசு பள்ளிகள் சிறப்பாக செயல்படும்....பழைய தேர்ச்சி முறையே சிறந்தது ஒன்றும் தெரியாமல் பாஸ் என்று ஜம்பம் அடித்து கொள்வதில் என்ன பலன் பிரோஜனம் உள்ளது ....
*************முக்கியமாக கடைசியாக் ஒரு கேள்வி மாணவர்கள் பாதிக்கபடகூடாது என்று வாய்கிழிய பேசி அனைவரும் பாஸ் என்ற முறையை கொண்டுவந்தவர்களும்....ஆங்கில கல்வி வேண்டாம் தமிழ் மொழியை ஒழிக்கிறார்கள் என்று கூப்பாடு போடும் அரசியல் வாதிகள் யாரவது இந்த முறை பின்பற்றப்படும் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை படிக்கவைகிரார்களா...????????????????
இனியாவது கல்வி முறைபற்றி இவர்கள் வாய்கிழிய பேசும்போது அவர்கள் பிள்ளைகளை எங்கு படிக்கவைகிரார்கள் என்ற கேள்விகளை கேட்க மறக்காதீர்கள்.....
Super
ReplyDeleteGood article
ReplyDeletePrivate schoolsla matttum verum pad am nadathum velaiyai mattuma nam parkirom. Egapatta
ReplyDeleteInccharges. Pad am purindhadha enbadha check panna oru supervisor correction workuku oruvar. Ippadi pala velaigaluku naduvil dhane private school teachers nelamayum. Salary yai compare panni parthom endral..... Parents oru pakkam management oru pakkam students oru pakkam...ippadi pala velai galuku naduvil dhane private school teachers sadhikirargal. Neengal solvadhu pola first mark vangi sadhanai pandradhil potti poda sollavilai. Nangal ketpadhu ippadi pala vasadhigalai edhirparthu gov school teachers thangaludaya pillaigalai private school sla serkirargal. Adhil 5% avadhu thannidam padikum students Ku kattalame. Portions mudikka mudiyama poradhuku pala reasons sollallam. Aanal adhai mudipadjarku oru reason irundha podhum ....
Conscience
Duty consciousness
Idharkudhan gov salary kodukirargal. School timela tea kadaila nikira gov school teachers pathadhilaya. Maraiva poi dham adikira teachers ippadi pala....
Thavarugaluku karanam solbavan kuttravaali
Thavargalai kalaya mudiyadhavan somber I
Thavarugaluku naduvil sadhipavane porali
Mele ulla dharathy avargalin katturaiyil gov school teachers private schools thangalin pillaigalai serpathatkana reasonsdhane thavira....gov schools students munnera theervaga paarka mudiyadhu.
Ore our Kelvi....
Oru sattam varudhunu vachipom
Gov school teachers oda children avanga areavil ulla gov schoolildhan Padilla vendum...
Andha madhiri oru situationla than pillaigal padikum podhu ipadi coola reason solla mudiyuma. Nichayama kovam vandhu ketpanga. Adhe kovam dhan enakum
Gov salary vangidjane Inga pillaigalai vasadhiya padikka vaika mudiyudhu....