கடந்த ஆண்டு வரை, பிளஸ் 2, தொழிற்கல்வி பாட விடைத்தாள்கள், ஒரு சில மையங்களில்மட்டும் திருத்தப்பட்டன.
இந்த ஆண்டு, 66 மையங்களிலும் திருத்துவதற்கு, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு, மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம், வரவேற்பு தெரிவித்துள்ளது.
சங்கத்தின் பொதுச் செயலர், ஜனார்த்தனன் வெளியிட்ட அறிவிப்பு: ஒரு சில மையங்களில் மட்டும், தொழிற்கல்வி பாட விடைத்தாள்கள் திருத்தப்பட்டதால், மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து, குறிப்பிட்ட மையங்களுக்கு, ஆசிரியர்கள் செல்லும் நிலை இருந்தது. மற்ற பாடங்களைப் போல், தொழிற்கல்வி பாட விடைத்தாள்களை,அனைத்து மையங்களிலும் திருத்த வேண்டும் எ ன, பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். முதல்முறையாக, இந்த ஆண்டு, கணக்குப் பதிவியல், தணிக்கையியல், அலுவலக மேலாண்மை, வணிகவியல், கணக்குப் பதிவியல் ஆகிய விடைத்தாள்களை, 66 மையங்களிலும் திருத்துவதற்கு, தேர்வுத் துறை உத்தரவிட்டு உள்ளது. விவசாயம், பொறியியல், சுகாதாரம், தட்டச்சு போன்ற பாட தேர்வுகள், இரு மையங்களில் மட்டும் திருத்தப்பட்டு வந்தன. தற்போது, எட்டு மையங்களாக விரிவுபடுத்தப்பட்டு உள்ளன.பல ஆண்டு கோரிக்கையை, இந்த ஆண்டு நிறைவேற்றிய தேர்வுத் துறையின் செயலை வரவேற்கிறோம்.இவ்வாறு, அவர் கூறி உள்ளார். தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு, கடந்த மாதம் 3ல் துவங்கி, 25ல் முடிவடைந்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி