விடைத்தாள் ஒன்றுக்கு 20 ரூபாய் வழங்க வேண்டும்: முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 11, 2014

விடைத்தாள் ஒன்றுக்கு 20 ரூபாய் வழங்க வேண்டும்: முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை


தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக கூட்டம், மாவட்டதலைவர் ரெங்கநாதன் தலைமையில் நடந்தது.
மாவட்ட செயலாளர் வீரசத்தியராமசாமி, மாவட்ட பொருளாளர் சரவணகுமரன் உட்பட பலர் பங்கேற்றனர். முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் அறிக்கையாக தயார் செய்யப்பட்டு, தேனி மேரி மாதா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் மதிப்பீட்டு மையத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் வழங்கப்பட்டது. இதே போல், சின்னமனூர் காயத்ரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் மதிப்பீட்டு மையத்தில், உத்தமபாளையம் மாவட்ட கல்வி அலுவலரிடம் வழங்கப்பட்டது.

விடைத்தாள் ஒன்றுக்கு 20 ரூபாய் வழங்க வேண்டும். உயிரியல், விலங்கியல் பாடங்களுக்கு காலை 10 விடைத்தாள்களும், மாலை 10 விடைத்தாள்களும் திருத்த வழங்க வேண்டும். மற்ற பாடங்களுக்கு, காலை 8 விடைத்தாள்களும், மாலை 8 விடைத்தாள்களும் வழங்க வேண்டும். அனைத்து பாடங்களுக்கும் அகமதிப்பீடு வழங்க வேண்டும்.கணிப்பொறி பாடத்திற்கு உள்ளது போல், அனைத்து பாடங்களுக்கும் 75 ஒரு மதிப்பெண் வினா வழங்கி, ஒளியிழை மதிப்பீடு கணிப்பான் அட்டை வழங்க வேண்டும். உயிர் தாவரவியல், உயிர் விலங்கியல் பாடங்களுக்கு தனித்தனி தேர்வு நடத்த, கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி